Select a page

அந்நஸீர் – உதவி செய்பவன்

An_Naseer

அல்லாஹ் தன்னை அந்நஸீர் – உதவியாளன் – என குர்’ஆனில் ஐந்து இடங்களில் குறிப்பிடுகிறான்.  அந்நஸீர் தான் தன்னுடைய அடியார்களுக்கு உதவியும் ஆதரவும் அளிப்பவன்.  அவன் தான் நம்பிக்கையாளர்களுக்கு ஆதரிப்பவனும், பலமளிப்பவனும், பாதுகாப்பவனும், உதவி செய்பவனும்.  அவனைத் தவிர வேறு உதவியாளர்கள் எவருமில்லை!

உதவியாளன், ஆதரவளிப்பவன், பாதுகாப்பவன்

நான்கு முக்கியமான கருத்துக்களைக் குறிக்கும்நூன்-ஸாத்-ரா என்ற மூல எழுத்துக்களிலிருந்துநஸீர்  என்ற சொல் பிறக்கிறது.  முதல் கருத்து, உதவுதல் அல்லது ஆதரவளித்தல், இரண்டாவது, பாதுகாத்தல், மூன்றாவது, வெற்றியளிப்பது அல்லது வெற்றிபெற உதவுவது, நான்காவது கருத்து, ஞானஸ்நானம் அல்லது கிறிஸ்த்தவராகுதல்.

இந்த வேரெழுத்துக்கள் குர்’ஆனில் 158 முறை 10 வருவித்த வடிவங்களில் வருகின்றன.  உதாரணம், யன்ஸுரு (அவன் உதவி செய்கிறான்), யன்தஸிரூன (உதவி அல்லது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல்), அல் நஸ்ரு (வெற்றி) நஸாரா (உதவியாளர்கள்).

மொழிரீதியாக, எல்லா விதமான உதவிகளையும் குறிக்க குர்’ஆனில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  உதாரணம், இஸ்தஆனா (அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முஸ்தஆனுடன் தொடர்புடையது) எல்லா விதமான உதவிகளையும் குறிக்கிறது.  நஸீர் என்ற பெயர்ச்சொல் அடக்குமுறை செய்பவருக்கெதிரான உதவியையும், யாரையாவது வெற்றி கொள்ள விரும்பும்போது உதவுவதையும் குறிக்கும்.  நஸ்ருல்லாஹ் என்பது, எவ்விதமான உதவியுடனும் ஒப்பிட முடியாத அல்லாஹ்வுடைய உதவியைக் குறிக்கும்.  அல்லாஹ் அந்நஸீர், அவன் தான், அவன் மேல் நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு இறுதியான உதவியாளன், ஆதரவாளன், பாதுகாப்பாளன்.

அந்நஸீர் கூறுகிறான்:: . . . அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன் (நஸீர்).[அல் குர்’ஆன்  22:78] … மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக (நஸீர்). இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.[அல் குர்’ஆன்  4:45] மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் (நஸீர்) இருக்கப் போதுமானவன்.[அல் குர்’ஆன்  25:31] அவர்கள்மாறுசெய்தால், நிச்சயமாகஅல்லாஹ்உங்களுடையபாதுகாவலன்என்பதைஅறிந்துகொள்ளுங்கள்அவன்பாதுகாப்பதிலும்மிகச்சிறந்தவன்; இன்னும்உதவிசெய்வதிலும் (நஸீர்)  மிகவும்சிறந்தவன்.[அல் குர்’ஆன்  8:40]

பல வகையான வெற்றிகள்

அந்நஸீர் கூறுகிறான்::: அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் (நாஸிரீன்) அனைவரிலும் மிகவும் நல்லவன். [அல் குர்’ஆன் 3:150] அல்லாஹ்வுடைய உதவி அல்லது வெற்றி (நஸ்ர்) மார்க்க அறிஞர்கள் விவரிப்பதன்படி பல வகைப்பட்டது.

நம்பிக்கை மற்றும் முயற்சி என்ற விலையைக் கொடுத்து பெறக்கூடிய தகுதியுள்ள வெற்றி ஒரு வகை.  உதாரணமாக, பத்ர் யுத்தத்தில் ஸஹாபா பெருமக்களுடைய தகுதியினால் பெற்ற வெற்றி.  அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழும் ஒரு நம்பிக்கையாளர் பெறும் வெற்றி இந்த வகையைச் சார்ந்தது.

இரண்டாவது வகை, குறிப்பிட்ட குழுவினருக்கு, கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசத்தினால் அல்லாமல், அல்லாஹ் (சுபஹ்) தன்னுடைய எல்லையில்லாவிவேகத்தினால், அச்சூழ்நிலையில் அவர்களுக்கு வெற்றியை விதித்திருப்பான்.

மூன்றாவது வகை, கொள்கை ரீதியான வெற்றி – இவ்வெற்றி வெளியார் கண்களுக்குத் தெரியாமல் போகலாம், ஆனால், உண்மையில் ஒரு மனிதன் பெறும் உண்மையான வெற்றியைக் குறிக்கும். சூரா புரூஜில் குறிப்பிடப்பட்டுள்ள நெருப்புக்குண்டங்களின் கதையில், கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட விசுவாசிகளின் மறுமை வெற்றி ஒரு உதாரணம்.  மேலும், ஃபிர்’அவுன் அவனுடைய மகளின் முடியலங்காரம் செய்யும் பெண் மற்றும் அவளுடைய குழந்தைகளைகொதிக்கும் எண்ணெயில் எரிந்தான்.  அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள்?  அவர்கள் அல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையிலும், தங்கள் கொள்கையிலும் நிலைத்திருந்தார்கள். அதனால், இறைவனின் பாதையில் உயிரிழந்தவர்களுக்கு அந்நஸீர்அளிக்கும் இறுதி வெற்றியான மகிழ்ச்சி மற்றும் நற்கூலியான உயர்ந்த சொர்க்கத்தைப் பெற்றார்கள்:

நீங்கள் இப்பெயரின்படி வாழ்வது எப்படி?

  1. அல்லாஹ்வின் பாதையீல் உதவி செய்யுங்கள்.

அந்நஸீர் கூறுகிறான்:(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.  [அல் குர்’ஆன் 3:160]. இஸ்லாத்திற்காக அல்லாஹ்வின் பாதையில் உதவி செய்யுங்கள், குர்’ஆனுடைய செய்தியைப் பரப்புங்கள், உங்களுடைய இஸ்லாமிய கொள்கையில் நிலைத்திருங்கள்.  வரலாற்றிலிருந்தும், சம காலத்திலும் உள்ள சரியான முன்மாதிரிகளையும், நாயகர்களையும் காண்பிப்பதன் மூலம் பிள்ளைகளுக்கு சத்தியத்திற்காக நிமிர்ந்து நிற்கக் கற்றுக் கொடுங்கள். முஸ்லிம் சமுதாயத்திற்குஇஸ்லாமியக் கொள்கையில் நிலைத்திருப்பவர்கள் தேவைப்படுகிறார்கள்.  அதனால், குர்’ஆனை நெருங்கி மற்றவர்களுக்கும் ஊக்கம் கொடுங்கள். உங்களுடைய செயல்பாடுகளுக்கு குர்’ஆனை வழிகாட்டியாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள், அல்லாஹ்வின் உதவி உங்களைத் தேடி வரும். ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். [அல் குர்’ஆன்47:7]

2. உங்களுடைய சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்யுங்கள்

முஸ்லிமில் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸிலிருந்து ஒரு பகுதி – நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: …ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் வரை அல்லாஹ்வும் அவனுக்கு உதவி செய்வான்.’இதிலிருந்து தெரிவது, எங்கு உங்களுடைய சகோதர, சகோதரிகளுக்கு உதவி தேவைப்படுகிறது என்று நீங்கள் சுறுசுறுப்பாகதேடி அவர்களுக்கு உதவினால், அந்நஸீர்அதற்குப் பதிலாக உங்களுக்கு உதவுவான்.  சில சமயம் ஒருவருடைய கடனை அடைப்பதன் மூலம் நீங்கள் பொருள் ரீதியாக உதவி செய்யலாம்.  ஆன்மீக ரீதியாக ஆலோசனைகள், அறிவுரைகள் கூறுவதன் மூலம் உணர்வு ரீதியான ஆதரவை அளிக்கலாம். அல்லது, உங்களுடைய அதிகாரம் அல்லது செல்வாக்கை பயன்படுத்தி பிறருக்கு உதவலாம். தேவையுள்ளவர்களுக்கு உதவுவதற்கு அந்நஸீர்உங்களுக்குக் கொடுத்துள்ள அனைத்தையும் பயன்படுத்துங்கள்!

3. சோம்பல் வேண்டாம்சில சமயம் மக்கள் அலுத்துப்போய் அல்லாஹ்வின் உதவி கிடைக்காது என நினைக்கலாம்.  அல்லாஹ்வின் மீதும் அவனுடைய உதவியிலும் ஒருபோதும் நம்பிக்கையிழக்காதீர்கள்! அந்நஸீரிடமிருந்து உதவியைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு நீங்கள் அவன் மீதும் அவனுடைய தன்மைகள் மீதும் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும். மூஸா (அலை) அவர்களிடமிருந்து இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்என்று கூறினார்  [அல் குர்’ஆன் 26:61-62]

ஆனால், செயல் இல்லாமல் வெறும் நம்பிக்கை கொள்ளாதீர்கள்.  நீங்கள் தேவையான ஏற்பாடுகள் செய்யவும் வேண்டும். சோம்பேறியாக இருந்து கொண்டு அல்லாஹ்வின் உதவி வரும் என எதிர்பார்க்காதீர்கள்! அதனால், அல்லாஹ்வைப் பற்றி நன்றாக சிந்தியுங்கள், அவன் மீது நம்பிக்கை வையுங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவெல்லாம் எடுக்க வேண்டுமோ அதையெல்லாம் முடிந்தவரை எடுங்கள்.

4. அல்லாஹ்விடமிருந்து மட்டுமே உதவி வருகிறது என்பதை அறியுங்கள். 

நீங்கள் சரியான முடிவு எடுத்ததனால் அல்லது உங்கள் திறமையினால் மட்டும் தான் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்களுக்கு உதவி கிடைத்தது என ஒருபோதும் நினைக்காதீர்கள்.  ஒரு போதும், நான் இதைச் செய்தேன் அதனால் வெற்றி பெற்றேன்.’ என சொல்லாதீர்கள். மாறாக, ‘அல்லாஹ் தான் என் உதவியாளன் அவனிடமிருந்தே எல்லா வெற்றியும் வருகின்றன.’ என்று கூறுங்கள்.  நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது அல்லாஹ் ஒரு நுட்பமான உதவியை அளிக்கிறான் – சரியான முடிவுகளை எடுத்தால் உங்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும், நிம்மதியும், தவறான முடிவுகளை எடுக்கும்போது மனதில் ஏற்படும் கவலையும்    அவநம்பிக்கையும் தான் அது. அதனால், உங்கள் வாழ்வில் அல்லாஹ்வின் உதவியை அடையாளம் தெரிந்து கொண்டு நன்றியுடன் இருங்கள்.

5. சூரா அந்நஸரின் படி வாழுங்கள்சூரா அந்நஸ்ர் [அல் குர்’ஆன் 110] அல்லது ‘வெற்றி’, பல படிப்பினைகளை அடக்கியுள்ளது, அவற்றை கடைபிடியுங்கள்.  இந்த சூரா இஸ்லாம் வெற்றிகரமாக பரவுவதையும், நபி (ஸல்) அவர்களுடைய முடிவு நெருங்குவதையும், பெரும் போராட்டங்களுக்குப் பின் வெற்றி கிட்டும்போது பின்பற்ற வேண்டியவைகளையும் குறிக்கிறது, கர்வமாக இருப்பதற்கு பதிலாக, அல்லாஹ்வைப் புகழுங்கள், நன்றி கூறுங்கள், அவனிடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்.  அதனால், அடுத்த முறை உங்களுக்கு ஏதாவது லாபம் அல்லது வெற்றி கிடைக்கும் போது, அல்லது ஒரு சவாலில் வெற்றி பெறும்போது, சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அஸ்தகஃபிருல்லாஹ் என்று மனமார கூறுங்கள்!

6. அந்நஸீரை அழையுங்கள்.

எத்தனை முறை மருத்துவர்கள் தீராத வியாதி, உயிரிழந்து விடுவார்கள் என்ற சொன்ன நோயாளிகள் அல்லாஹ்வின் உதவியால் குணமடைந்திருக்கிறார்கள்!  அந்நஸீருடைய உதவியை மட்டும் கேளுங்கள் – அவன் அந்த உதவியை மற்ற மனிதர்கள் அல்லது பொருட்களின் மூலம் செய்யக் கூடும். அவன் வியாதியிலிருந்து குணம் பெற உதவி செய்வான், ஒரு எதிரியை அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் எந்த சிரமத்தையும், மனரீதியாக, உளரீதியாக அல்லது பொருள் ரீதியாக வெற்றி கொள்ள உதவுவான்!

நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் அறிவான்..

அந்நஸீருடன் பொருள் ரீதியாக தொடர்புடைய அல்லாஹ்வின் அழகிய பெயர்களை அறிந்து அவற்றின் படி நடந்து கொள்ள, கீழேயுள்ள இரு பெயர்கள் மீது சொடுக்குங்கள்.

அல் மௌலா, அல் முஸ்த’ஆன்

யா அல்லாஹ், அந்நஸீர், நீ மட்டும் தான் உண்மையான உதவியாளன் என்பதை நாங்கள் அறிவோம். உனக்காக பாடுபடுபவர்களாகவும், எங்களுடைய சகோதர, சகோதரிகளுக்கு உதவுபவர்களாக எங்களை ஆக்கி, அதற்குப் பதிலாக உன்னுடைய உதவியை நாங்கள் பெற உதவி செய்வாயாகஉன் மீதும், உன்னுடைய உதவியின் மீதும் எங்களுக்கு உள்ள நம்பிக்கையை உறுதியாக்கி, அதை தேடவும், நீ மட்டுமே உதவிகளுக்கு மூலாதாரம் என்பதை உணர்ந்து அதற்கு நன்றியுடையவர்களாக எங்களை ஆக்குவாயாக இம்மையில் எங்களுக்கு வெற்றியையும், முக்கியமாக மறுமையின் உச்ச வெற்றியான ஜன்னதுல் ஃபிர்தொஸையும் எங்களுக்கு அருள்வாயாக. ஆமீன்!

www.understandqurantamil.com


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online