Select a page

இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு குர்’ஆனிய தீர்வு பகுதி – 2

Quran-Remedies-For-Youth-Part-2சமூக ஆதரவு

நம் அனைவருக்கும் நண்பர்களும், துணைவர்களும் தேவைப்படுகிறது.  நம் இளவயதில் பெரும்பகுதி சமூக ஊடாடல்களில் கழிகிறது.  முக்கியமானது எதுவென்றால், யாருடன் நீங்கள் நேரத்தைக் கழிக்க விரும்புகிறீர்கள் என்பது தான். நீங்கள் சரியான தோழர்களுடன் – உங்களுக்கு இறைநினைவையும், நிரந்தர சுவனத்தையும் நினைவூட்டுபவர்களுடன் – நேரத்தைக் கழிக்கும்போது, அவர்கள் உங்களுடைய ஈமானுக்கு வலுவூட்டுவதோடு, உங்கள் இதயத்தை ஊக்கம் தரும் நினைவுகளால் நிரப்புவார்கள்.

 ஒரு மனிதன் தன்னுடைய தோழனின் நம்பிக்கையைப் பின்பற்றக்கூடும், அதனால், நீங்கள் யாருடன் நட்பு கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். [அபு தாவூத் & திர்மிதி]

மாறாக தவறான நட்பு, உங்கள் ஈமானை பலமிழக்கச் செய்வதோடு, உங்களுடைய ஒழுக்கத்தையும், வாழ்வில் சந்திக்கும் பல சூழ்நிலைகளையும் நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதையும் பாதிக்கும்.  அவர்கள் உங்களைக் கீழ்த்தரமான விருப்பங்களுக்கும், புறம் கூறுதல், நேரத்தை வீணாக்குதல் போன்றவற்றிற்கும் இட்டுச்செல்வார்கள்.  இது உங்களுக்கு மன அழுத்தத்திற்கு மேல் அழுத்தத்தைத் தான் தரும்.

“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?” “நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.) [அல் குர்’ஆன் 25:28-29]

இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்)

உங்களுடைய சில கவலைகளைப் போக்க, இரவு முழுதும் இணையத்தில் உலாவவும், திரைப்படங்கள் பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும் ஆவல் ஏற்பட்டாலும், உங்களுடைய கவலைகளை நிரந்தரமாகப் போக்கக் கூடிய தஹஜ்ஜுத் தொழுகையில் உங்கள் இரவுகளை முதலீடு செய்தால் என்ன? பகலில் சிறிது ஓய்வெடுத்து, இரவில் முன்னேரத்திலேயே உறங்கச் செல்வதன் மூலம் இந்த சிறப்புத் தொழுகைக்காக உங்களைத் தயாராக்கிக் கொள்வதோடு, இரவில் கடைபிடிக்கக் கூடிய சுன்னத்களையும் பழக்கமாக்கிக் கொள்ளலாம்.   அதனால், உலகம் உறங்கும்போது, கண் விழித்து அல்லாஹ்வுடன் ஒரு ஆழமான உரையாடலில் ஈடுபடுங்கள்.  பாவமன்னிப்பும், உங்கள் காரியங்களில் தெளிவையும் கேளுங்கள்.  உங்களுடைய பாரங்களை இறக்குங்கள்.  இந்த நேரத்தை உங்களைப் படைத்தவனுடன் ஒரு பிணைப்பை உண்டாக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

“இரவில் மூன்றில் ஒரு பகுதி மீதமிருக்கும்போது நம்முடைய ரப் (அதிபதி), மிக்க உயர்ந்தவன், மிக்க மகத்துவமுள்ளவன், கீழ் வானிற்கு இறங்கி அறிவிக்கிறான், ‘யார் என்னிடம் கேட்க விரும்புகிறார்கள், நான் அவருக்கு பதிலளிக்கிறேன், யார் என்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறார்கள் நான் மன்னிக்கிறேன்…” [முஸ்லிம்]

உங்கள் நோக்கங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

எண்ணங்கள் என்ற பெரும் சக்தியின் மூலமாக உங்களுடைய மனப்போக்கை மாற்றுவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.  பிரச்சினைகளாலும், உங்களை வீழ்த்தக்கூடிய எண்ணங்களாலும் நீங்கள் ஆட்கொள்ளப்படும்போது, எண்ணங்கள் என்ற விசையை சரி செய்து ஷைத்தானை வெளியேற்றுங்கள்.  புதுப்பிக்கப்பட்ட எண்ணங்களால், நீங்கள் இன்னும் அதிகமான நற்கூலி பெறுவதோடு, உங்கள் மனநிலையில்  முன்னேற்றத்தையும் புத்துணர்ச்சியையும் உணருவீர்கள்.

ஒரு செயலைச் செய்வதன் காரணம் பிறருடைய கவனத்தைக் கவருவது போன்ற மலிவான எண்ணங்கள் இல்லாமல், அல்லாஹ்(சுபஹ்)வை திருப்தி செய்வது என்ற உயர்ந்த, நேர்மையான நோக்கம் எப்போதும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

உங்கள் வாழ்வில் மன இறுக்கத்தைக் குறையுங்கள்

இப்போது நீங்கள் வேறெதையும் விட உள் அமைதியையும், சந்தோஷத்தையும் நாடுகிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் அதை அடையலாம்.  ஆனால், மீனுடையவரான, யூனுஸ் (அலை) அவர்களைவிட பெரிய மன அழுத்தம் என்ன வந்துவிட முடியும் உங்களுக்கு! [மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது..] [அல் குர்’ஆன் 68:48]

அல்லது ஆரோக்கியம், செல்வம், குடும்பம் அனைத்தையும் இழந்த அய்யூப் (அலை) நிலை உங்களுக்கு ஏற்பட்டால்…  [இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது...] [அல் குர்’ஆன் 21:83]

அல்லது, அன்னை ஹாஜர் (அலை) தவிப்புடன் ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே உதவி தேடி அலைந்ததைப்போல்?

தன் குடும்பம், பிரியமானவர்களைப் பிரிந்து, அடிமையாக விற்கப்பட்ட யூசுஃப் (அலை) அவர்களின் நிலையில் உங்களைக் கற்பனை செய்ய முடியுமா?

அடுத்தமுறை நீங்கள் uLஉள் அல்லது புற போராட்டங்கள், நம்பிக்கை அல்லது அச்சம், பணி அல்லது பண விவகாரங்கள், உணர்வுகளின் பாதிப்பு அல்லது வெட்கப்படக்கூடிய ஏதாவது ஒன்றை சந்திக்கும்போது குர்’ஆன், சுன்னாவிலிருந்து வழிகாட்டுதலைப் பெறுங்கள்.  ஒரு சமயத்தில் ஒரு பக்கம், ஒரு சமயத்தில் ஒரு ஹதீஸ் -  உங்களுக்கு அதில் ஒரு செய்தி இருக்கும். முதலில் உங்களுக்கு அச்செய்தி கிடைக்காவிட்டால், கவனத்துடன் படியுங்கள்.  பிறகு, மீண்டும் படித்து, சிந்தனை செய்யுங்கள்.  உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

உங்களுடைய மன அழுத்தங்களைப் போக்க இந்த பிரத்தியேகமான நிவாரணங்களை முயற்சி செய்யுங்கள்!

—————————————————————————————————————

இதை எழுதிய சகோதரி ஆமினா இதோடா, முஸ்லிம் இளைஞர்கள் அல்லாஹ்வுடனான தங்கள் இணைப்பை கண்டுபிடிக்கத் தூண்டும் ஒரு எழுத்தாளர், கல்வியாளர், தொழிலதிபர். சமுதாயத்திற்கு தேவையான பெரும் தலைவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கக்கூடிய முக்கியமான ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளவும், அனுபவம் பெறவும்   இளைய சமுதாயத்திற்கு பல வாய்ப்புகள் இருப்பதாக இவர் நம்புகிறார். முஸ்லிம் இளைய சமுதாயத்திற்கு அவருடைய முதல் அறிவுரை “முதுமைக்கு முன்னால் உங்கள் இளமையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”  ஆக்கபூர்வமான தூண்டுதல்கள் பெற இவருடைய இணையதளமான www.youthlyhub.com ல் இவருடன் இணையுங்கள்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online