Select a page

உங்களுடைய ஞாபகசக்தியை மேம்படுத்த வேண்டுமா?

கவனம் என்பது மனப்பாடம் செய்வதில் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று— குறுகிய கால ஞாபகத்திலிருந்து, நீண்ட கால ஞாபகமாக தகவல்களை மாற்றுவதற்கு கவனம் தேவை.

இதைச் செய்வதை விட சொல்வது எளிது.  நவீனயுகத்தில் நாம் பலவிதமான கவனச்சிதறல்களால் தாக்கப்படுகிறோம், அதனால், நம்மில் பெரும்பாலோனோர், படிப்பில் கவனம் செலுத்துவதற்க்காக,   நம் வாழ்வில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அறிவுரைகள்

நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான படிக்கும் பாணி இருக்கிறது.  அதனால், எல்லா முறைகளும் எல்லோருக்கும் பொருந்தாது. எது உங்களை மிகச் சிறப்பாக கவனம் செலுத்த வைக்கும் என்பதை பரிசோதனை செய்து பார்த்து கண்டுபிடிக்க வேண்டும்.

தினமும் ஒரே இடத்தில், ஒரே  நேரத்தில் படிக்க முயலுங்கள். இது உங்கள் மூளைக்கு மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு, வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கும். படிப்பதற்கு முன்னால், நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

அளவுக்கு மீறி உண்ணாதீர்கள். பட்டினியாகவும் இருக்காதீர்கள். அதிகமாக உண்ணுவது உங்களைச் சோர்வாக்கும். மிகக் குறைவாக உண்ணும்போது உங்கள் கவனம் உணவிலேயே இருக்கும்.

உங்களுக்கு குறைவான நேரம் தான் கவனம் செலுத்த முடியும் என்றால், ஒரு காலம்குறிக்கும் கருவியை உபயோகியுங்கள். 20 நிமிடங்கள் தான் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள் என்று முடிவு செய்து கொண்டு, ஒரு சிறு இடைவேளையில் இரு நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் மூளையும், உடலும் உங்களுக்கு நன்றி சொல்லும்.

நிதானமாக இருங்கள்.  உங்களை நீங்களே அவசரமாகப் படித்து முடிக்கத் தள்ளாதீர்கள். உங்கள் மூளையில்  நீங்கள் படிக்கும் விஷயம் பதியவில்லை என்றால், வெறுத்து சோர்வடைந்துவிடாதீர்கள்.  சென்ற வாரத்தை விட இப்போது உங்களுக்கு அதிகம் தெரியும் என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சாதகமான முறையை நீங்கள் கற்க உபயோகியுங்கள். நீங்கள் காட்சி சார்ந்த கல்வியில் விருப்பமுள்ளவராக இருந்தால், ஒளிப்படங்களைப்பாருங்கள் அல்லது உங்களுடைய குறிப்புகளை பல வண்ணங்களில் கோடிட்டு வையுங்கள்.  நீங்கள் கேட்பது மூலம் கற்பவராக இருந்தால், ஒலிப்பதிவுகளைக் கேளுங்கள், பாடத்தின் முக்கியமான பகுதிகளை உங்கள் குரலிலேயே பதிவு  செய்துகொள்ளுங்கள்.

மிகவும் முக்கியமானது, அல்லாஹ் (சுபஹ்)விடம், உங்கள் வெற்றிக்கு உதவும்படி பிரார்த்தனை செய்வது.

குர்ஆனைப் படிப்பதிலும், பரப்புவதிலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அல்லாஹ் (சுபஹ்) வளமாக ஆசிர்வதிப்பானாக. ஆமீன்.

தொலைக்காட்சிப்பெட்டி, இசை, உரக்கப் பேசுபவர்கள் போன்ற கவனச்சிதறல்கள் இல்லாத இடத்தில் படிக்க முயலுங்கள்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online