Select a page

உடற்பயிற்சி நீங்கள் படிப்பதற்கு எப்படி உதவுகிறது?

உங்கள் மூளை பயன்பெற உடற்பயிற்சி செய்யுங்கள்

எலியை வைத்து சமீபத்தில் நடத்திய ஒரு சோதனையில், தன்னிச்சையாக செய்யக்கூடிய உடற்பயிற்சியினால் மூளையின் வீழ்ச்சியின் வேகம் 50% குறைககிறது! உடற்பயிற்சி, மூளை உயிரணுக்களின் வளர்ச்சியையும், நரம்பியல் கடத்தலையும் (neural transmission-மூளையின் அணுக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளுதல்)மேம்படுத்துகிறது.  இது ஞாபகசக்தியையும், புரிந்து கொள்ளுதலையும் மிகப்பெரிய அளவில் உயர்த்துகிறது.

“மனநிலை, ஞாபகசக்தி, படித்தல் சம்பந்தமாக உங்கள் மூளைக்கு நீங்கள் செய்யக் கூடிய சிறந்த செயல் உடற்பயற்சி ஒன்று தான்.”என ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மனநல மருத்துவரும், ‘ஸ்பார்க்: உடற்பயிற்சி மற்றும் மூளையின் புரட்சிகரமான புதிய அறிவியல்’(Spark: The Revolutionary New Science of Exercise and the Brain)என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஜான் ரேட்டீ (John Ratey)கூறுகிறார். “வெறும் 10நிமிட செயல்பாடு கூட உங்கள் மூளையை மாற்றுகிறது.”

எத்தனை முறை?

பெரும்பாலான நிபுணர்கள் ஒரு நாளைக்கு 30-60 நிமிடம் போதுமானது என கூறினாலும், நீங்கள் அதிக நேரம் மேசையில் பணி புரியக் கூடியவராக இருந்தால், சிறு உடற்பயிற்சி இடைவேளைகளை, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு காலம் காட்டியின் மூலம் குறித்த நேரத்தில், இரண்டு நிமிட  பயிற்சிகள், நடன அசைவுகள், நின்ற இடத்திலேயே ஓடுதல், அல்லது உங்களுடைய ரத்தத்தை ஓடிகொண்டிருக்க வைக்கும் எதையும் செய்யலாம்.  நீங்கள் செய்வது கேளிக்கையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், அதனால் நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்வீர்கள்!

என்ன மாதிரி?

மூளைக்குச் சிறந்த பயிற்சி, முழு உடலையும் ஈடுபடுத்தக்கூடிய உடற்பயிற்சிகள், நடனம் அல்லது டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் என ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியின் மூலம் தெரிய வருகிறது.  இது ஒரு வேளை, சிக்கலான அசைவுகளுக்கு மூளையின் கவனம் தேவைப்படுவதால் இருக்கலாம். அல்லது உங்கள் உடல் முழுவதையும் உபயோகிப்பது உச்சகட்ட பயனை, உடலுக்கும்,உள்ளத்திற்க்கும் அளிப்பதால் இருக்கலாம்.

மிகச் சிறந்த பயிற்சி

மிகச் சிறந்த பயிற்சி எது? தொழுகை! தொழுகைக்கு முழு மனம், உடல், ஆன்மா அனைத்தும் ஒன்றாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.  அல்லாஹ் (சுபஹ்) நம்முடைய நன்மைக்காக, இப்போது தான் விஞ்ஞானிகள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளவற்றை, அற்புதமான பரிசுகளாகக் கொடுத்திருக்கிறான்.

அல்லாஹ் (சுபஹ்) குர்ஆனைப் கற்ப்பதிலும், பரப்புவதிலும் நாம் எடுக்கும் முயற்சிகளில் அருள்வளத்தைப் பொழிவானாக!  ‘…நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், (அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக்கொண்டும் இருப்பதால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்..’[அல் குர்ஆன் 3:79]


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online