Select a page

ஒரு சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள்: ஆழ்ந்த நன்றியின் வெளிப்பாடு: ஜஸாக்கல்லாஹு கைரன்!

say_salam1

“நன்றி.”
“நீங்கள் எத்தனை இனிமையானவர்.”
“உண்மையிலேயே உங்களைப் பாராட்டுகிறேன்.”
போன்ற இன்னும் பல…
உங்களுக்கு யாராவது ஒருவர் உதவினால் என்ன சொல்வீர்கள்? இப்போது ஒரு நாளின் பல முறை நீங்கள் “ஜஸாக்கல்லாஹு கைரன்” என்று சொல்வதன் மூலம் ஒரு விலை மதிப்பற்ற சுன்னத்திற்கு புத்துயிர் கொடுக்கலாம்.
‎
 خيرًا 
 اللهُ جزاك
“ஜஸாக்கல்லாஹு கைரன்” என்றால்: “அல்லாஹ் உங்களுக்கு நன்மையை அருள்வானாக.” என்று பொருள். உண்மையில் இது ஒரு துவா, அதனால், இதை நம்பிக்கையுடன் கூறுங்கள்!

இலக்கணம்:
ஜஸாக்கல்லாஹு கைர்/கைரன் – ஒரு ஆணிடம்
ஜஸாக்கில்லாஹு கைர்/கைரன் – ஒரு பெண்ணிடம்
ஜஸாக்குமுல்லாஹ் கைர்/கைரன் – பன்மை

குறிப்பு: ‘ஜஸாக் அல்லாஹு கைரன்’ என்பது தான் ஹதீஸில் உள்ளது. ‘ஜஸாக் அல்லாஹ்’ அல்ல.
‘ஜஸாக் அல்லாஹு கைரன்’ என்று சொல்பவர்களுக்கு எப்படி பதில் சொல்வீர்கள்?
பெரும்பாலான அறிஞர்களின் கருத்தின் படி, மற்ற சொற்றொடர்களுக்கு குறிப்பிட்ட பதில் இருப்பது போல், இதற்கு சுன்னத்தில் குறிப்பிட்ட பதில் எதுவும் இல்லை. நீங்கள் ‘ஜஸாக் அல்லாஹு கைரன்’ என்பதுடன் பொருள் பொதிந்த எந்த வார்த்தைகளையும் சேர்த்து பதில் சொல்லலாம். உதாரணமாக, ‘வ இய்யாக்கும்’ அல்லது ‘வ இய்யாக்’ (மேலும் உங்களுக்கும்) அல்லது ‘ஆமீன்’ , ‘வ ஜஸாக்’ அல்லது ‘வ ஜஸாக்கும்’ (ஆமீன், மேலும் உங்களுக்கும் நன்மையை அருள்வானாக), ‘வ இய்யானா வ இய்யாக்கும்’ (மேலும் எங்களுக்கும் உங்களுக்கும்) அல்லது, ‘வ இய்யாக் கதாலிக்’ (மேலும் உங்களுக்கும் அது போல்).
தமிழில் சில பதில்கள்:
“ஆமீன், உங்களுக்கும் சகோதரரே,”“ஆமீன், உங்களுக்கும் அது போல”
“மேலும் அவன் உங்களுக்கும் நற்கூலி அளிக்கட்டும்.”

இதைச் சொல்வதன் மூலம்:
• துவா செய்ததற்கான நன்மையைப் பெறுவீர்கள்.
• மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் துவாக்களை வானவர்கள் உங்களுக்காகச் செய்வார்கள்.
• யாருக்காக துவா செய்தீர்களோ அவரிடமிருந்து நீங்கள் பதிலுக்கு துவாவைப் பெறக்கூடும்.
• நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்திற்கு புத்துயிர் கொடுத்ததற்காக நன்மையைப் பெறுவீர்கள்!
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தன் சகோதரரிடம் ‘ஜஸாக்கல்லாஹு கைர்’ என்று கூறுவதில் என்ன இருக்கிறது என அறிந்திருந்தால், நீங்கள் ஒருவருக்கொருவர் இதை அதிகமாக கூறுவீர்கள்.’ [முஸன்னஃப் இப்னு அபி ஷைபா   (5/322)] இப்போதிலிருந்து இதை உங்களுடைய குடும்பத்தினரிடம், பிள்ளைகளிடம், நண்பர்களிடம், அதிகமதிமாக கூறி பெரும் நன்மைகளைப் பெறுங்கள், இன் ஷா அல்லாஹ்!


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online