Select a page

ஒரு சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள் – செலவழிப்பது ஒரு வழிபாடா?

NL0252.1

 

குழந்தைகளின் அரையாடைகள் எத்தனை விலை உயர்ந்ததாக இருக்கின்றன.!

மற்ற செலவுகளும் மிக அதிகமாக இருக்கின்றன!

ஆனால், குடும்ப செலவு ஒவ்வொன்றையும் நற்கூலிகளின் கருவூலமாக மாற்றலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?  அடுத்த முறை நீங்கள் வாடகை கொடுக்கும்போது, மளிகை சாமான் வாங்கும்போது, அல்லது பிள்ளைகளின் விளையாட்டுப் போட்டிக்காக செலவு செய்யும்போது, அதை அல்லாஹ்விற்காக ஒரு தர்மம் செய்வதாக எண்ணிக் (நிய்யத்) கொள்ளுங்கள். உங்கள் நோக்கம் அப்படி இருக்கும்போது, அல்லாஹ் (சுபஹ்) அந்த செலவுகளை ஸதகாவாக கணக்கில் வைத்துக் கொள்வான், இன் ஷா அல்லாஹ்!

அபு மஸ்வூத் அல் பத்ரி [‫عنه الل رضى ] அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் தன் குடும்பத்தாருக்கு செலவுகள் செய்வதை ஒரு (இபாதத் – வழிபாடாக) எண்ணி செய்தால் அது ஒரு தர்மம் தான் என்பதில் சந்தேகமேயில்லை.” [அஹமத், புகாரி, முஸ்லிம்]

நபி ( ‫وسلم عليه الله صلى ) அவர்கள் கூறினார்கள்: உங்கள் குடும்பத்தாருக்காக நீங்கள் செலவு செய்யும் ஒரு தினார், ஒரு ஏழைக்காக நீங்கள் செலவழிக்கும் ஒரு தினார், அல்லாஹ்வுக்காக நீங்கள் செலவழிக்கும் ஒரு தினார் – இவற்றில் அதிக நன்மை பெற்றுத்தருவது நீங்கள் உங்கள் குடும்பத்துக்காக செலவழித்தது தான். [முஸ்லிம்]

  • அடுத்த முறை நீங்கள் ஒரு வீட்டிற்காக செலவு செய்யும்போது, அல்லது மளிகை சாமான்கள் விலையைக் கொடுக்கும்போது, உங்கள் மனதில் அது ஒரு ஸதகா என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
  • குடும்ப செலவுகளைச் செய்யும்போது, உங்களுக்கு நீங்களே அது ஒரு வழிபாடு – இபாதத் என நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
  • மற்றவர்களுக்கும் குடும்ப செலவு செய்யும்போது எண்ணங்களை புதுப்பித்துக் கொள்வது எத்தனை முக்கியம் என்பதை சொல்லிக் கொடுங்கள்!

0 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online