Select a page

ஒரு சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள் – தும்மும்போது உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்!

NL0264.1

அல்லாஹ் (சுபஹ்) தும்மலை விரும்புகிறான், கொட்டாவியை வெறுக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?  ஒரு முஸ்லிமாகிய நீங்கள், தும்முதலின் மூலம் நற்கூலி கூட பெறலாம்!

ஸயீத் தன் தந்தையிடமிருந்து, அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்டதாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘அல்லாஹ் தும்மலை விரும்புகிறான், கொட்டாவியை வெறுக்கிறான். அதனால், உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால் அவர் இயன்றவரை அதை அடக்கிக் கொள்ள வேண்டும், சப்தம் உண்டாக்கக் கூடாது, ஏனென்றால், அது, அவரைப் பார்த்து சிரிக்கும் ஷைத்தானிடமிருந்து வருகிறது.’ [அபு தாவூது]

தும்முவது என்ற இயற்கை செயல், அல்லாஹ்வுடைய கருணையும், அன்பும் ஆகும்.  அது நம்மை ஒரு அசுகத்திலிருந்து விடுவிக்கிறது, அதனால், அதற்காக நாம் அல்லாஹ் அஸ்ஸவஜலுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  தும்மும்போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று நீங்கள் கூறினால், ஒரு சுன்னத்திற்கு நீங்கள் புத்துயிர் கொடுக்கிறீர்கள்!

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘உங்களில் ஒருவர் தும்மினால், அவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (நன்றியும், புகழும் அல்லாஹ்வுக்கே) என கூறட்டும்.  அவருடன் இருப்பவர், ‘யர்ஹமுகல்லாஹ்’ (அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக) என கூற வேண்டும்.  அவர் ‘யர்ஹமுகல்லாஹ்’  என்று சொன்னவுடன், முன்னவர் (தும்மியவர்) ‘யஹ்தியகுமுல்லாஹ், வ யுஸ்லிஹு பாலகும்’ (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக, மேலும், உங்களுடைய காரியங்களை சீராக்குவானாக) என்று கூற வேண்டும். [புகாரி],

தும்மும்போது உயிரூட்ட வேண்டிய இன்னொரு சுன்னத்தும் உள்ளது; நபி (ஸல்) அவர்கள் செய்தது போல், உங்களுடைய வாயை மூடிக் கொள்ளுதல்.  நபி (ஸல்) அவர்கள் தும்மும்போது, தன் வாயை தன்னுடைய கை அல்லது ஒரு துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார்கள்.  அதன் மூலம் சப்தத்தை அடக்கிக் கொள்வார்கள்.  [அபுதாவூது, திர்மிதி]

  • நீங்கள் அல்லது உங்கள் அருகில் இருக்கும் சக முஸ்லிம் தும்மும்போது சொல்ல வேண்டிய து’ஆக்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் தும்மும்போது உங்கள் வாயை உங்கள் கையினால், அல்லது, ஒரு துணியினால் மறைத்துக் கொள்ளுங்கள்.
  • தும்முவதில் பின்பற்ற வேண்டிய சுன்னத்துக்களை குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்!

நீங்கள் பயன் பெற பிரார்த்திக்கிறோம்.

அண்டர்ஸ்டாண்ட் குர்’ஆன் அகாடெமி குழுமம்

0 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online