Select a page

ஒரு சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள்: ஒவ்வொரு முறை பிரிந்து, சந்திக்கும்போதும் ஸலாமை மீண்டும் கூறுங்கள்

NL0281.1

எத்தனை முறை உங்கள் நண்பர்களுடன் நடந்து கொண்டிருக்கும்போது குறுகிய நேரம் பிரிந்து போயிருக்கிறீர்கள்?  நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், அப்போது திடீரென்று ஒரு தூண் அல்லது ஒரு கார் குறுக்கே வருகிறது.  மற்றவர்கள் வேறு பக்கமாக நடக்க நீங்கள் மறுபக்கம் செல்ல, சில விநாடிகளுக்கு ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.  இந்நிலையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சுன்னத் என்ன தெரியுமா?

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எவர் தன் சகோதரரைச் சந்திக்கிறாரோ அவர் ஸலாம் கூறட்டும்.  ஒரு மரமோ, சுவரோ அவர்களுக்கிடையே குறுக்கிட்டால், அவர்கள் மீண்டும் சந்திக்கும்போது, அவருக்கு ஸலாம் கூறட்டும்.’  [புகாரி, அதப் அல் முஃப்ரத் 1010]

இதன் பொருள் நீங்கள் யாரையாவது சந்திக்கும்போது, அவரை ஸலாம் சொல்லி வாழ்த்த வேண்டும்.  பிறகு, குறுகிய நேரம் ஒரு மரம், குறுக்கே வரும் ஒரு தூண் அல்லது காரினால் நீங்கள் பிரிந்து விட்டால், மீண்டும் சந்திக்கும்போது ஸலாம் கூற வேண்டும்.

ஒரு சபையை விட்டுப் பிரிந்து போகும்போதும், சிறிது நேரம் கழிந்து மீண்டும் வரும் போதும் இதே சுன்னத்தைத் தான் பின்பற்ற வேண்டும்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அவர் சரியாகத் தொழாததால் மீண்டும் தொழச் சொன்னார்கள்.  அதனால், அந்த மனிதர் சபையை விட்டு பிரிந்து போய் தொழுது விட்டு, மீண்டும் வந்த சேர்ந்து கொண்ட போது ஸலாம் கூறினார்கள்.

செயல்படுத்த வேண்டியவற்றின் பட்டியல்:

  • ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு முஸ்லிமைச் சந்திக்கும்போதும், வேறு எதுவும் பேசுவதற்கு முன்னால், ஸலாம் சொல்லுங்கள்.
  • வேறு ஒருவருடன் சேர்ந்து நடக்கும்போது, குறுக்கிடும் ஒரு பொருளினால் நீங்கள் இருவரும் சிறிது நேரம் பிரிந்து விட்டால், மீண்டும் சந்திக்கும்போது, மீண்டும் ஸலாம் கூறுங்கள்.
  • இன் ஷா அல்லாஹ், மறந்து விட்ட இந்த சுன்னத்தை குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள், அதைக் கடைபிடிப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருங்கள்.

நீங்கள் பயன் பெற பிரார்த்திக்கிறோம்.

அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் தமிழ் அகாடெமி

0 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online