நம்மில் பலர் ஒரு வீட்டிற்காக, சுத்தம் செய்வதிலிருந்து, வாடகை கொடுப்பது வரை, பல மணி நேரங்கள் உழைக்கிறோம். உங்களிடம் யாராவது ஒரு பெரிய வீட்டை இலவசமாக தருகிறேன் என்றால், அதற்காக நீங்கள் எந்த உழைப்பையும் தர வேண்டிய அவசியமில்லை என்றால், அதுவும் அது நிரந்தரமாக உங்களுக்குச் சொந்தமானது என்று சொன்னால், அது சாத்தியம் என்று நீங்கள் நினைப்பீர்களா?
மிகவும் பூரணமான, குறைகளற்ற வீடு அல்லது பல வீடுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு நிமிடம் கூட நீங்கள் செலவழிக்க அவசியமில்லாத ஒரு காரியம் தான்.
குறைகளற்றவனால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்ட உங்களுடைய கனவில்லத்தை அடைய வழி வகுக்கும் இந்த சுன்னத்தை கற்றுக் கொள்ள நீங்கள் தயாரா?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,: ‘எவர் குல் ஹுவல்லாஹு அஹது’ (சூரத்துல் இக்லாஸ்) சூராவை 10 முறை ஓதுகிறாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு இல்லத்தை அமைத்துத் தருவான். [ஸஹீ அல்ஜாமி’அஸ் ஸகீர்6472]
இத்தனை மகத்தான, அற்புதமான வெகுமதிக்கு எத்தனை எளிதான செயல்!
குறிப்பு: சூரத்துல்இக்லாஸுடையநன்மைகளைவிவரிக்கும்பலஹதீஸ்கள்உள்ளன, இருப்பினும்அத்தனையும்நம்பகமானவைஅல்ல. ஒருஎண்ணிக்கைஎன்றுஇல்லாமல், தோராயமாகஉங்களால்எத்தனைமுறைமுடியுமோஅத்தனைமுறைநாள்முழுதும்ஓதலாம் என்பது பல அறிஞர்களின்கருத்தாகஇருக்கிறது.
- சூரத்துல் இக்லாஸை சரியான தஜ்வீதுடன் ஓதுங்கள். ஷேக் கலீல் அல் ஹுஸரியுடைய ஓதுதலையும் நீங்கள் கேட்டு சரியான உச்சரிப்பை கற்றுக் கொள்ளலாம்.
- ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைப் படியுங்கள்.
- ஒரு ஒட்டும் தாளில் எழுதி கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்து அதை ஓதுவதற்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
- இன் ஷா அல்லாஹ், இந்த அழகிய ஹதீஸை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
நீங்கள் பயன் பெற பிரார்த்திக்கிறோம்
அண்டர்ஸ்டாண்ட் குர்’ஆன் தமிழ் அகாடெமி குழுமம்