Select a page

குர்’ஆனின் ஒளியில் பெண்களின் உரிமைகள்: உரிமைகளுடன் சேர்ந்து சுதந்திரமும் வருகிறது

22706536275_e95eb6311a_b

‘’பழமைவாதிகளாகிய என்னுடைய பெற்றோரோடு எனக்கு அலுத்துப் போய் விட்டது!’’ அவள் முணகினாள்.  ‘’எனக்கு காஃபி கிளப்புக்கு போக வேண்டும், குட்டைப் பாவாடை அணிய வேண்டும், ஆண்களுடனும், பெண்களுடனும் சேர்ந்து பழக வேண்டும்.. மொத்தத்தில் எனக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும்!’’

ஷைமா, மிகவும் கண்டிப்பான முஸ்லிம் பெற்றோர்கள் உடைய ஒரு இனிய பதினாறு வயது பெண்.  அவள் பெற்றோருடைய கடுமையான கண்காணிப்பு அவளை சலிப்படைய வைத்தது.  அவள் காணும் ஹாலிவுட் படத்தில் உள்ள பெண்கள் சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.  அவர்களுக்கு கெட்டதாக எதுவும் நடக்கவில்லையே! ஷைமாவுடைய பெற்றோரும், அமைதியாக, அவள் விரும்பிய விதத்தில் வாழ விட்டால் என்ன?

‘’ஆனால், நீ சுதந்திரமாகத் தான் இருக்கிறாய், நீ நினைப்பதை விட அதிகமாகவே சுதந்திரம் அனுபவிக்கிறாய்!’’

‘’எப்படி?‘’ அவள் கேட்டாள். ‘’அப்பெண்கள் எல்லாம் மிகவும் திடமாகவும், திறமிக்கவர்களாகவும் இருப்பதாகத் தெரிகிறது.  ஆனால், முஸ்லிம் பெண்களாகிய நாமோ மிக பலவீனமாகவும், ஆதரவற்ற நிலையிலும் இருப்பதாகத் தோன்றுகிறது!’’

‘’அந்த ஹாலிவுட் படங்கள் பொய்யான ஒரு தோற்றத்தையே கொடுக்கின்றன. தன் பெற்றோருக்குக் கூட தெரியாத சில நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கா இரவில் வீட்டை விட்டு வெளியேறும் ஒரு பெண், வன்முறைக்கும், சக நண்பர்களின் வற்புறுத்தலுக்கும், பலாத்காரத்திற்கும் ஆளாகும் வாய்ப்பு அதிகம்.”

‘’ஆண் நண்பர்கள் உள்ள ஒரு பெண்?  பல வியாதிகளையும், நன்னடத்தை இழப்பதையும், இதயம் உடைவதையும் சந்திக்க நேரிடலாம்.  அதிலிருந்தெல்லாம் அவள் மீள முடியாமல் கூட போகலாம்.’’

‘’புகை பிடிக்கும் ஒரு பெண்? குடிப்பழக்கம் இருப்பவள்? போதை மருந்துகள்?  இதெல்லாம், வெறும் ஆர்வம் காரணமாக ஆரம்பித்ததாக இருக்கலாம்.  நாளடைவில், அவற்றிற்கெல்லாம் அடிமையாகி அவளுடைய வாழ்வே பாழாகக் கூடும்.”

திடீரென ஷைமா சோகமாகி விட்டாள்.

‘’அந்த படங்களையெல்லாம் நெருங்கி ஆராய்ந்தால், அவை உன்னுடைய சுதந்திரம் என்ன என்பதை உனக்கு வரையறுக்க மிகவும் கடுமையாக முயலும்.  பெண்களுக்கு சுதந்திரம் என்றால் எதை அவர்கள் சொல்கிறார்கள்? உடல் தெரியும் ஆடை, ஆபத்தான இடங்களுக்குச் செல்வது, திருமணத்திற்கு முன் தவறான உறவில் ஈடுபடுதல், இவையெல்லாம் தான்.’’

ஷைமா வெட்கத்துடன், “ஆம்” என்றாள்.

‘’என்றைக்காவது, ‘சுதந்திரம் என்பது நீங்கள் விரும்புவதைச் செய்வது’ என நீங்கள் நினைக்க வேண்டும் என விரும்பும் அவர்கள், நீங்கள் கேள்விக்குரிய செயல்களை செய்ய விரும்ப வேண்டும் என ஏன் கூறுகிறார்கள் என்று சிந்தித்திருக்கிறீர்களா?’’

ஷைமா தன் தலையை செம்மறி ஆடு போல ஆட்டினாள்.

‘’ஏனென்றால்,’’ நான் தொடர்ந்தேன், ‘’உண்மையில், இம்மாதிரி நடத்தைகளில் ஈடுபடுவது உன்னுடைய நல்லதற்காக அல்ல.  புகையிலை, மது, போதை மருந்துகள், நவீன ஆடைகள், நகைகள் போன்றவற்றை விற்பவர்களுக்காகவும், பெண்களை மனிதர்களாக இல்லாமல், வெறும் பொருட்களாக பயன் படுத்தும் ஆண்களுக்காகவும் தான்.

‘’ஒரு முஸ்லிம் பெண்ணாக, உனக்கு, அடிமையாவதிலிருந்தும், சுரண்டலிலிருந்தும், துஷ்பிரயோகம், பொருட்கள் மேல் ஆசையிலிருந்தெல்லாம் விடுதலை கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும், நீ எத்தனை அதிகமாக உலகைப் பற்றி அறிந்து கொள்கிறாயோ, அத்தனை அதிகம், உன் மேல் அக்கறை கொண்டு, அம்மாதிரி சிரமங்களிலிருந்தெல்லாம் உன்னைப் பாதுகாக்கும் அளவிற்கு, உன் பெற்றோர்கள் பத்தாம்பசலிகளாக இருப்பதை எண்ணி மகிழ்வாய்..’’

அவள் சிரித்தாள்.  “ஓ.கே.  ஆனால், நான் வாழ்வில் என்ன சாதிக்க முடியும்?’’ என அவள் கேட்டாள்.

‘’உன்னுடைய படிப்பில் கடினமாக உழை,’’ என நான் அவளிடம் கூறினேன், ‘’மேலும், வாழ்வில் நீ செய்யும் அனைத்திலும், உன்னுடைய மிகச் சிறந்த திறமையைக் காட்டு.  மிகவும் முக்கியமான ஒன்று, குர்’ஆனைப் படித்து, அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள், ஏனென்றால், அவனுடைய அடிமையாக இருப்பதை விட பெரிய சுதந்திரம் எதுவும் இல்லை.”

”நம் உம்மத் முழுதும், உலகிற்கு வியக்கத்தக்க பங்களிப்புகளை அளித்த முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள்.  நீயும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்!’’

“அதில் குட்டைப் பாவாடை அணிவது இல்லா என நினைக்கிறேன்.’ என்று கூறி ஷைமா சிரித்தாள்.

காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.[அல் குர்’ஆன் 3:196]

 

வஸ்ஸலாம்.

அண்டர்ஸ்டாண்ட்குர்’ஆன்தமிழ்அகாடெமி

0 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online