Select a page

குர்’ஆனின் ஒளியில் பெண்களின் உரிமைகள்: உரிமைகளுடன் சேர்ந்து பொறுப்பும் இருக்கிறது

1430190-bigthumbnail

 

‘’நான் என்ன படிக்கிறேன் என்று தெரிந்தால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்!’’ அவள் மூச்சு வாங்க, தன் ஹிஜாபின் நுனியை தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு,  உற்சாகத்துடன் பேசினாள்.

அகப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் மற்றும் தயக்கத்துடன் தன் பையிலிருந்து அப்புத்தகத்தை எடுத்தாள்.

‘’சரி தான், உண்மையிலேயே நீ இதைப் படிக்கிறாய் என்று என்னால் நம்ப முடியவில்லை’’ என நான் ஒப்புக்கொண்டேன்.

அப்புத்தகம் விற்பனையில் உலகளாவிய முதலிடத்தைப் பெற்றுள்ளது. இப்போது அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  நான் அதைப் படிக்கவில்லை.  ஆனால், அது ஒரு மணமாகாத, உண்மையில் பரஸ்பர அன்பும் இல்லாத தம்பதியருக்கிடையேயுள்ள அந்தரங்கமான உறவின் துஷ்பிரயோகத்தைப் பற்றிய கதை என்று தெரியும்.

‘நீ ஏன் இதைப் படிக்கிறாய்?’’ நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.  “உன்னுடைய கல்வி சம்பந்தப்பட்டது என்றால் சரி, ஆனால், உன்னுடைய கல்லூரி இதை ஒரு பாடமாக வைக்கவில்லையே.  மேலும், இதை ஒரு இலக்கியம் என்று கூட சொல்ல முடியாதே.’’

‘’ஓ, இல்லை,’’ அவள் சிரித்தாள்.  ‘’சும்மா பொழுதுபோக்கிற்காக.  அந்த கதாநாயகனை நான் விரும்புகிறேன், அவன் எத்தனை சக்தியுள்ளவனாகவும், வியக்கத்தக்கவனாகவும் இருக்கிறான்!  அம்மாதிரி ஆண்களை இங்கே பார்க்க முடியாது!  இதோ, உங்களுக்கு கொஞ்சம் படித்துக் காட்டுகிறேன்—’’

‘வேண்டாம், வேண்டாம்’’ நான் அவசரமாக மறுத்தேன். ‘’ பரவாயில்லை.’’

என்னுடைய சொற்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.  நான் பேசுவதற்க்கு அத்தனை யோசிப்பவள் அல்ல, இருப்பினும், ஒரு சகோதரி, மெள்ள, மெள்ள தவறான பாதையில் செல்ல எத்தனிக்கும்போது, குறைந்த பட்சம் ஒரு “ஆபத்து, எச்சரிக்கை” என்பதையாவது காட்ட விரும்புகிறேன்.

‘’பாருங்கள்,’’ நான் கூறினேன், ‘’இந்த ஹிஜாபை நீ அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிதலைக் காட்டும் அடையாளமாக அணிகிறாய்.  ஆனால், இம்மாதிரி எழுத்துக்களை படிப்பதென்றால், அதில் அர்த்தமே இல்லை.  ஒரு முஸ்லிமாக உன் எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருப்பது உன்னுடைய கடமை.’’

‘’நான் எந்நேரமும் இதைப் படிப்பதில்லை,’’ அவள் பதிலளித்தாள்.  அவளுடைய உற்சாகம் இப்போது கோபமாக மாறத் தொடங்கியது.  “எப்போதாவது தான், ஒரு வடிகாலாக.’’

‘’எப்போதாவது வடிகாலாக என்றால் பரவாயில்லை’’ நான் ஒப்புக் கொண்டேன். ‘’ஆனால், இம்மாதிரி சொற்களையும், படங்களையும் உன் மனதில் போட்டுக் கொண்டால், அவை மீண்டும், மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.  அவற்றை நீ என்றுமே விரட்ட முடியாது.”

‘’இப்புத்தகத்திலிருந்து ஏதாவது ஒன்று, நீ தொழுகையில் இருக்கும்போது நினைவுக்கு வந்தால் என்ன செய்வாய்? அக்கணத்தில் உனக்கு அல்லாஹ்வுடன் இருக்க வேண்டிய தொடர்பை அது துண்டித்து விடும். அது மட்டுமல்ல, ஹராமான உறவுகளைப் பற்றி உற்சாகப் படுவது, உன்னையே அம்மாதிரி உறவில் ஈடுபட தூண்டக்கூடும்.  உண்மையில், இப்புத்தகத்தைப் படிப்பது ஷைத்தானுக்கு கதவைத் திறப்பதற்கு சமம்.”

“ஆனால், நான் படிக்க விரும்புவதைப் படிப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது!”  அவள் அழுத்தமாக கூறினாள். “மேலும், என்னுடைய எண்ணங்கள் எனக்கும், என்னைப் படைத்தவனுக்கும் இடையே உள்ளது!”

‘’நிச்சயமாக உனக்கு உரிமை இருக்கிறது,” நான் ஒப்புக் கொண்டேன்.  “ஆனால், உரிமையுடன் சேர்ந்து பொறுப்பும் வருகிறது. குர்’ஆன் நம்முடைய தூய்மை அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வருகிறது என்று கூறுகிறது:

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது – எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் – மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

[அல் குர்’ஆன், 24:21]

‘’அல்லாஹ் (சுபஹ்), உனக்கு தூய்மையாகக் கொடுத்துள்ள ஒன்றை ஏன் நீ அழுக்காக்குகிறாய்?’’

இறுதியில் நான் பேசியது என் தோழியின் மனதில் பதிந்து, அந்த புத்தகத்தைத் தூக்கி எரிய சம்மதித்தாள்.

“இது பரிட்சை சமயம்.  நான் என் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.’’

காரணம் எதுவாக இருந்தாலும் சரி, என்னால் மனதார சொல்ல முடிந்ததெல்லாம்,  ’அல்ஹம்துலில்லாஹ்!’’ மட்டும் தான்.

நீங்கள் பயன்பெற பிரார்த்திக்கிறோம்.

 

அண்டர்ஸ்டாண்ட் குர்’ஆன் தமிழ் குழுமம்

 

0 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online