Select a page

குர்’ஆனில் மது

NL0278

“என்னால் அந்த வீட்டிற்குப் போக முடியாது,’’  என ராபர்ட் வருத்தமாக கூறினான்.  “அடிக்கடி அவர்கள் வீட்டில் மது புட்டியைப் பார்க்கிறேன்.  எனக்கு மிகவும் சபலமாக இருக்கிறது.’’
ராபர்ட் முஸ்லிமாக இல்லை; அவன் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறான்.  சிறிதளவு அப்பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்தாலும்,  இறையருளால் மட்டுமே அவன் தப்பித்த, அது அவன் அது வரை அனுபவித்து வந்த கொடுமைக்கு மீண்டும் ஆளாகி விடுவான்.  அவனுடைய குடிப்பழக்கத்தினால், மனைவி, மக்கள், வீடு, வேலை எல்லாவற்றையும் இழந்து விட்டான்.
மதுவிற்கு அடிமையாகி, அவன் ஒரு மனிதருடன் சண்டை போட்டு, அவருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டு, ராபர்ட்டுக்கு சிறை தண்டனை கிடைத்திருக்கிறது.  அதனால், தன்னை பல ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்திய பொருளை மீண்டும் குடிப்பதிலிருந்து எந்தவிதமான சபலத்தையும் தவிர்க்க வேண்டும் என அவன் நினைப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ராபர்ட்டுடைய கதை மிகவும் சாதாரணமானது.  மது அருந்துவது உண்மையிலேயே பாவமா? பலர் மதுவை குறைந்த அளவில், தங்கள் உணவை ரசிப்பதற்கும், தங்கள் உடல்நலத்திற்காகவும் அருந்துகிறார்கள்.  திராட்சைச்சாறைப் புளிக்க வைத்து தயாரிக்கப்படுவது  ‘வைன்’ என்ற மது.  திராட்சையும், புளிக்க வைப்பதும் அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளில் உள்ளதல்லவா?

மது விலக்கு கால கட்டத்தில் அமெரிக்க சீர்திருத்தவாதிகள் மதுவை பூதாகரமாக சித்தரித்தது போல் இல்லாமல், குர்’ஆன் அதில் ‘சில நன்மைகள்’ இருப்பதாக ஏற்றுக் கொண்டு, ஆனால், அதிலுள்ள தீமை அதிலுள்ள நன்மைகளை விட அதிகமானது என எச்சரிக்கிறது.

 (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” …’ [அல் குர்’ஆன் 2 :219]

மது அருந்துவதை குர்’ஆன் தடுக்கிறதா?

இன்று சில முஸ்லிம்கள், யூத, கிறிஸ்தவர்கள், மற்ற மதத்தவர்களைப் போல் மிதமாக மது அருந்துவது ஒரு முஸ்லிமின் வாழ்வின் சாதாரணமான ஒரு பகுதி என்று கூறுவார்கள்.  குர்’ஆன் வெளிப்படையாக மதுவைத் தடை செய்யவில்லை.  மேலும், சுவர்க்கத்தில் நாம் மிகச் சுவையான மதுவைப் பெறுவோம் என வாக்களிக்கப்பட்டுள்ளோம்!

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன . . . [அல் குர்’ஆன், 47:15]

ஆனால், இத்தகைய மது சொர்க்கத்தில் மட்டும் தான் இருக்க முடியும்.  ஏன்?  ஏனென்றால், இவ்வுலகில் நாம் பல குழப்பங்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  முஸ்லிம்களாகிய நாமும் “தங்கமாக ஜொலிக்க” வேண்டுமென்றால், நாம் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.  நாம் இன்னும் பலவீனமான, பின்தங்கிய நிலையில் இருக்கும்போது, மது என்ற சிறிய விஷயம் கூட, எல்லா விதமான கொடுமைகளையும் அளிக்கக் கூடிய மிகத் தீய அரக்கனாகி விடும்:

  • மது நம்முடைய, நம் குடும்பங்களுடைய அல்லது ஏழைகளுக்கு மிகவும் தேவையான செல்வத்தைப் பறித்து விடும்.
  • மது நம்முடைய கௌரவத்தையும், நற்பெயரையும் கெடுத்து விடும்.
  • மது நமக்குள் இருக்கும் தடைகளைத் தகர்த்து பாவங்கள் புரியத் தூண்டும்.
  • மது நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
  • மது நம் குடும்ப உறவுகளைச் சீர்குலைக்கும்.
  • மது நாம் உழைத்து சம்பாதிக்கும் ஆற்றலைக் கெடுக்கக் கூடும்.
  • மது நம்மை முரட்டுத்தனமாக நடக்கவும், அழிவுப்பாதையிலும் இட்டுச் செல்லும்.
  • மது நம்முடைய உற்ற தோழர்களை புண்படுத்த வைக்கும்.

மேலே உள்ளதெல்லாம், சுவனத்தில் நமக்குக் கொடுக்கப்படும் மதுவுக்குப் பொருந்தாது!

(அமுதம்நிறைந்த) ஒருவர்கோப்பையைமற்றொருவர்பறித்துக்கொள்வர், ஆனால்அதில்வீணுமில்லை, குற்றமிழைப்பதும்இல்லை.[அல் குர்’ஆன்,, 52:23]

காலம் போகப் போக, நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு மதுவை தடை செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதைக் கண்டார்.  ஆனால், மதுவிலக்கு உடனடியாக முஸ்லிம்கள் மீது திணிக்கப்படவில்லை.  மாறாக, நபி (ஸல்) அவர்கள் சிறிது, சிறிதாக அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கி, பதர் போருக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மதுவை முற்றிலும் தடை செய்தார்கள்.

சிலர் மதுவிலக்கை ஒரு மிகையாகக் கருதினானலும், பெரும்பாலான முஸ்லிம்கள், அல்ஹம்துலில்லாஹ், அதை சமுதாயத்தை பல மலையளவு துன்பங்களிலிருந்து காக்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதினார்கள்!

ராபர்ட் ஒரு முஸ்லிமாக வளர்ந்திருந்தால், அவன் இன்று விழுந்திருக்கும் பயங்கரமான குழியிலிருந்து தப்பித்து, இன்று அனுபவிக்கும் தனிமை மற்றும் ஏழ்மைக்குப் பதிலாக, ஒரு நல்ல வாழ்வை வாழ சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நபி (ஸல்) அவர்கள் நமக்கு நல்ல அறிவுரைகளை அளித்தார்கள்.  அவரை நமக்கு அனுப்பிய இறைவன் அன்பும், கருணையும் மிகைத்தவன் அல்லவா?

வஸ்ஸலாம்.

அண்டர்ஸ்டாண்ட்குர்ஆன்தமிழ்அகாடெமி


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online