Select a page

குர்’ஆனும் பெண்களின் உரிமைகளும்: தனக்கு மனைவியைத் தேடும் ஒருவருடைய கதை

muslim-woman-quran1

“எனக்கு ஒரு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  உங்களால் எனக்கு உதவ முடியுமா?” என யூனுஸ் கேட்டார்.

“புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணக்க நான் விரும்புகிறேன்.  ஏனென்றால், அவருக்கு நான் இஸ்லாமைக் கற்றுக் கொடுக்கலாம்.”

யூனுஸ், அல்ஜீரியாவைச் சேர்ந்த ஒரு சிறந்த மருத்துவ மாணவர்.  அவர் தாடியுடனும், மென்மையான குணத்துடனும் உள்ள ஒரு பாரம்பரிய முஸ்லிம்.  பல அல்ஜீரிய தாய்மார்களும் தங்கள் மகளுக்கு ஏற்ற நல்ல துணை என்று எண்ணக் கூடியவராக இருந்தார்.  இருப்பினும் அவர் ஒரு புதிய முஸ்லிமுக்கு தீனை ஆழமாகப் புரிய வைப்பதற்கு ஆவல் காட்டியது வியக்கத்தக்கதாக இருந்தது.

“அற்புதம்!  ஆனால், வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்வது மிகவும் சிரமமானது.  பல தவறான புரிந்து கொள்ளுதல் போன்றவற்றிற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.  நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத பல வழிகளில் உங்களுடைய பொறுமை சோதிக்கப்படும்.” என்று கூறினேன்.

“அப்படியில்லை” என்று அவர் எனக்கு உறுதியளித்தார்.  “நாங்கள் இருவரும் முஸ்லிம்களாக இருப்பதால் எல்லாம் நன்றாக இருக்கும்.  நானும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.” என்றார்.

“அவர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தால்?”

“அவர்களுக்கு வேலை செய்ய வேண்டிய தேவை இருக்காது. நான் ஒரு மருத்துவராக வேலை செய்வேன்.” என்றார்.

“அவர்களுக்கு வெளியே சென்று பணி புரிய விருப்பம் இருந்தால் அனுமதிப்பீர்களா?” நான் வலியுறுத்தினேன்.

“இல்லை! அவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா?  அது தானே நல்லது?”

“ஆமாம், சிறு குழந்தைகளுக்கு அம்மாவின் கவனிப்பு தேவை தான்,”  நான் ஒப்புக் கொண்டேன்.  ‘ஆனால், குழந்தைகள் பிறப்பதற்கு முன்னால், அல்லது, குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பின்?”

“அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்ளலாம் அல்லவா?” என்று கேட்டு யூனுஸ் சிரித்தார்.

ஒரு வளர்ந்து வேலை செய்யும் ஒரு மனிதனுக்கு, ஒரு மனைவி வீட்டில் இருந்து தன்னுடைய ஒவ்வொரு நொடியையும் அவனுடைய மகிழ்ச்சிக்காக ஏன் செலவிட வேண்டும் என்று கேட்க நான் விரும்பவில்லை.  ஆனால், ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த விரும்பினேன்.

“பாருங்கள், யூனுஸ்,” நான் கவனமாகத் தொடர்ந்தேன், “நீங்கள் கூறுவது வேண்டுமானால், இல்லத்தரசியாக மட்டும் இருப்பதற்காகவே வளர்க்கப்பட்ட ஒரு பாரம்பரியமான முஸ்லிம் பெண்,  அல்லது, தானாகவே விரும்பி மிகவும் அடக்கமான, தனிமையான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் பெண்ணுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம்.  ஆனால், ஒரு படித்த வெளிநாட்டுப் பெண் நீங்கள் கூறக்கூடிய வாழ்க்கையில் திருப்தி பெற மாட்டாள்.”

“அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருந்து, இவ்வுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும்,” நான் தொடர்ந்தேன். “மேலும், அவர்களுக்கு, தன்னுடைய பிள்ளைகளுக்கு இந்த உலகத்தை, இன்னும் நல்ல இடமாக மாற்றக் கூடிய ஏதோ சக்தி இருப்பதாக உணர வேண்டும்.  ஆற்றுவதற்கும், மாற்றுவதற்கும், பெண்களின் குரல்கள் உலகில் ஒலிக்க வேண்டும் என்ற உண்மையை நாம் எதிர்கொள்வோம்.! இன்னும், இதில் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு இருக்கும் என்ற உணர்வு இருக்க வேண்டும்.”

யூனுஸுக்கு நான் சொல்வது ஏற்புடையதாக இல்லை என்று எனக்குத் தோன்றியது.

“நீங்கள் சொல்வது போன்ற திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது என்று நான் சொல்லவில்லை.” என்று நான் குறிப்பிட்டேன்.  “ஆனால், ஆரம்பத்திலேயே நீங்கள் எதிர்பார்ப்பது அது தான் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி விட வேண்டும்.  அதன் பிறகு, அவர்களுக்கு அத்தகைய வாழ்க்கை தான் வேண்டுமா என சிந்தித்து, முடிவெடுப்பதற்கு முழு சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டும்.”

யூனுஸுடைய வெறுமையான பார்வையை சந்திக்க முடியாமல் நான், நம்பிக்கையிழந்து, “யூனுஸ், உங்கள் அம்மாவிடம் சொல்லி, உங்கள் ஊரிலிருந்தே,  வீட்டில் இருப்பதில் மகிழ்ச்சியடையும் ஒரு பாரம்பரிய முஸ்லிம் பெண்ணைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.” என்றேன்.

மனித குலத்தின் தொடக்கத்திலிருந்தே பெண்களின் உரிமைகள் முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதால், அதனை அத்தனை எளிதாக ஒதுக்கி விட முடியாது.  ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் இருப்பது போல், பெண்களுக்கும் மறுக்க முடியாத சில குறிப்பிட்ட உரிமைகள் இருப்பதைப் பற்றி கேள்வி எதுவும் இல்லை.  குர்’ஆன் இந்த உரிமைகளைப் பாதுகாத்து, ஆதரவளிக்கவில்லையென்றால், அது குர்’ஆனாக இருந்திருக்காது.

மிகவும் முக்கியமான உரிமை – தேர்ந்தெடுக்கும் உரிமை.

சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி குர்’ஆன் திட்டவட்டமாக குறிப்பிடா விட்டால், நம் வாழ்வில் முக்கியமான தேர்ந்தெடுத்தல்களின் போது, நாம் உண்மையிலேயே அதன் சாராம்சம் என்ன என்பதை ஆராய வேண்டும். யூனுஸுடைய விஷயத்தில் நாம் பெண்களின் உரிமைகள் பற்றி குர்’ஆன் என்ன சொல்கிறது என்று தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

  • பெண்ணுக்கு அவள் விருப்பப்படி திருமணம் புரியவோ, மணவிலக்கு பெறவோ உரிமை உண்டு [அல் குர்’ஆன் 2:230] [அல் குர்’ஆன் 2: 234, 240], மறுமணம் புரியும் உரிமையும் உண்டு. [அல் குர்’ஆன் 33:28] [அல் குர்’ஆன் 33:50]
  • ஒப்பந்தங்கள் செய்ய உரிமை உண்டு ஆனால், அவள் மேல் அது திணிக்கப்படக்கூடாது. [அல் குர்’ஆன் 4:128]
  • சட்டத்தினால் நீதியாக நடத்தப்பட வேண்டிய உரிமை உண்டு. [அல் குர்’ஆன் 24:6]
  • பாவம் புரிந்து விட்டால், ஆணை விட அதிகமான தண்டனை பெண்ணுக்கு கிடையாது. [அல் குர்’ஆன் 24:2]
  • பெண் கருவுற்றிருக்கும்போதும், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருக்கும்போதும், அவளுடைய கணவனுடன் உறவு முறிந்து விட்டால் கூட, கவனிப்பும், வாழ்வாதாரமும் பெறும் உரிமை உண்டு. [Quran 65:6]
  • தன் கணவனின் மற்ற மனைவிகளுடன் சமமாக நடத்தப்பட வேண்டிய உரிமை உண்டு. [அல் குர்’ஆன் 4:20]
  • இறைவனுக்கு மாறு செய்யும் கட்டளைகளை இடும் நிராகரிக்கும் கணவனின் கட்டளைகளுக்கு மாற்றமாக செயல்படும் உரிமை உண்டு. [அல் குர்’ஆன் 66:11]
  • கணவனுடன் உறவு கொள்ளும் உரிமை உண்டு. [அல் குர்’ஆன் 2:187]

குர்’ஆன், பெண்களுக்கு, தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மார்க்க சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, தங்கள் வாழ்க்கையை தாங்களாகவே வகுத்துக் கொள்ளும் உரிமையைத் தந்திருப்பதோடு, உடல்ரீதியான மற்றும் உணர்வு ரீதியான தேவைகள் உடைய அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது  தெளிவாகத் தெரிகிறது.   ‘இல்லை’ என்று மறுத்து வாதாடுபவர்களுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன் – ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுவது அவருடைய சுயவிருப்பம் சார்ந்தது.  அதில் எவ்விதமான கட்டாயமும் இல்லை.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.[அல் குர்’ஆன் 2:256]

ஒரு முஸ்லிம் பெண் ஏற்கனவே அடக்கமான, தன் குடும்பத்திற்கு  சேவை செய்கிற வாழ்வைத் தேர்ந்தெடுத்துள்ளாள்.  மேலும், அவள் தன்னை அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிபவளாக முழுதும் அர்ப்பணித்துள்ளபோது, எந்த ஒரு ஆணும் அவளை இதைத் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்த தேவையில்லை.  இது அவளுடைய சுதந்திரம் – சமூகக் கட்டாயங்கள், உலக  நிர்ப்பந்தங்கள், பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகுதல், துஷ்பிரயோகம், அடக்குமுறை இவற்றிலிருந்தெல்லாம் சுதந்திரம் – மேலும், அவளுடைய உரிமையும் ஆகும்.  தன் மனைவியின் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு கணவன், தன்னைப் படைத்தவனை மதிப்பவன் ஆவான்.

யூனுஸைப் பொருத்தவரை, அவர் தன்னுடைய எதிர்பார்ப்பில் தெளிவாகவும், நேர்மையாகவும் இருந்து, அவர் விரும்பியவாறு இல்லத்தரசியாக மட்டும் இருப்பதையே தன் விருப்பமாகவும் கொண்டுள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தால் அவர் மீது எந்த தவறும் இல்லை.  இன் ஷா அல்லாஹ், அவருக்கு அது போல ஒரு பெண் கிடைப்பாள்.

நீங்கள் பயனடைய பிரார்த்திக்கிறோம்.

அண்டர்ஸ்டாண்ட் குர்’ஆன் தமிழ் குழுமம்


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online