Select a page

குர்ஆனை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் படியுங்கள்

குர்ஆனைக்கற்றுக்கொள்வது என்பது தஜ்வீத், சூராக்களை மனப்பாடம் செய்தல், நுணுக்கமான விஷயங்களை நினைவில் வைத்திருத்தல் மட்டுமல்ல. குர்ஆன் கல்வியின் ஒரு பகுதி, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் ஆய்வதையும் அடக்கியிருக்க வேண்டும். இது, உங்களுடைய அறிவை ஆழமாக்கிக் கொள்வதுடன், அல்லாஹ் நீங்கள் எதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறானோ அதனைத் தெரிந்து கொள்ள உங்களுடைய இதயத்தை திறக்கும்.

உங்களுடைய சுய ஆர்வத்தில் கூட இதைத் தொடங்கலாம். உங்களுக்கு அறிவியல் பிடிக்குமா? குர்ஆனிலுள்ள அறிவியல் தொடர்பான வசனங்களை எடுத்துக்கொண்டு, அவற்றைப்பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். உங்களுக்கு இலக்கியத்தில் நாட்டமா? குர்ஆனிலுள்ள கவிதை நடையிலுள்ள வசனங்களைப் படித்து ஆர்வம் பெறுங்கள் – அவற்றை மனப்பாடம் செய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும்நண்பர்களிடம் ஓதிக் காட்டலாம். நீங்கள் ஒரு மக்களின் மனிதரா? அப்படியானால், குர்ஆன் நட்பு, சமுதாயங்கள், மற்ற மனித உறவுகள் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

இணையத்தில் உள்ள எத்தனையோ சிறந்த குர்ஆன் தேடுதல் தளங்கள் (search sites)உங்களுடைய தனிப்பட்ட ஆய்வை மேற்கொள்வதை எளிதாக்குகின்றன.

அல்லாஹ் (சுபஹ்) விவேகத்தை இச்சமுதாயத்திற்கு பொதுவாகவும், உங்களுக்குப் தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும்படி வைத்திருக்கிறான். இது ஒரு வியக்கத்தக்க பரிசல்லவா? அதை தூசியடையும்படி அலமாரியில் வைத்து விடாதீர்கள்! திறந்து, ஆராய்ந்து, ஒவ்வொரு முறை புதிதாக எதையாவது அறியும்போதும் ‘அல்ஹம்துல்லில்லாஹ்’ என்று சொல்லுங்கள்!

அல்லாஹ் (சுபஹ்) குர்ஆனைப்படிப்பதிலும், பரப்புவதிலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வளமாக ஆசீர்வதிப்பானாக!

‘……“நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தைநீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்.”…. [அல் குர்ஆன், 3:79]


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online