Select a page

கோடைகாலத்தின் அருளைப்பற்றிய சிந்தனை

முன்னொரு ஜும்மா சிறப்புப் பகுதியில் நாம் சாபிகூன் பற்றி அறிந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் தான் நன்மையான காரியங்கள் செய்வதில் முந்திக் கொள்பவர்கள். அவர்களை முதல் ரேங்க் விசுவாசிகள் என்று சொல்லலாம், சொர்க்கத்தை நோக்கி முதலில் மிக வேகமாக ஓடுபவர்கள்.

தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவோம்.  அது ஒரு வெப்பமான நாள், பூங்காவிற்கு செல்வதற்கு மிக சரியான நாள். என்னைச் சுற்றி, உரக்க சிரித்துக் கொண்டிருந்த, கோடை கால ஆடை அணிந்த பெண்களையும், மலர்கள் நிறைந்த மரங்களின் நிழலில் தம்பதிகளையும், மேகங்களுக்கிடையே பளபளத்த சூரியனையும் பார்த்தேன்.

சில சமயம், நாம் ‘தளர்ந்து’ நமக்கு அனைத்தையும் கொடுத்த அல்லாஹ்வின் நினைவை விட்டு எப்படி விலகியிருக்கிறோம் என கவனித்திருக்கிறீர்களா?

கேள்வி இது தான்: நீங்கள் எப்படி கோடையிலிருந்து நன்மையடைந்து சொர்க்கத்தை நோக்கி ஓடுவீர்கள்?

நம் வாழ்வில் தினசரி சூழ்நிலைகளில் சிலவற்றை எடுத்து அவற்றை உங்கள் குறிக்கோளான சாபிகூனை அடைய நினைவூட்டக்கூடிய சில முக்கிய பாடங்கள்!

அல்லாஹ் (சுபஹ்) இவ்வார மைய வசனத்தில் வாக்களிப்பது போல, “நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப்பாக்கியம் உள்ளது, தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.” [அல் குர்ஆன் - , 78:31-32]

தோட்டத்தில் ஒரு நாளில், உங்களுக்கு பயனளிக்கக்கூடிய 5 சிந்தனைக் குறிப்புகள் 

1.  கோடை ஆடைகளும் குஃப்ரின் அச்சமும்:

உங்களைச் சுற்றி, அல்லாஹ்வை மறந்த மக்களைப் பார்க்கும்போது, குழப்பங்களும் (ஃபிதன்), பேரிடர்களும் நிறைந்த இவ்வாழ்வில் உங்களுக்கு உதவக்கூடிய ஒன்று, அல்லாஹ்விடம் மனமுருகி உங்களுடைய மார்க்கத்தில் நிலைத்து நிற்க உதவும்படி மன்றாடுங்கள். நீங்கள் முஸ்லிமாகத்தான் மரணிப்பீர்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை; ஒரு முஸ்லிமல்லாதவராக மரணித்து, சொர்க்கத்து அழகை நுகர வாய்ப்பேயில்லாமல், என்றென்றும் நரக நெருப்பில் இருக்க வேண்டிய நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி), முஹம்மது நபி (ஸல்) கூறியதைக் கேட்டதாக அறிவித்தார்கள்: ‘ஆதமுடைய அத்தனை மக்களுடைய இதயங்களும் அர் ரஹ்மானுடைய இரு விரல்களுக்கிடையே, ஒரே இதயமாக உள்ளன. அவன் தான் விரும்பிய திசைகளிலெல்லாம் புரட்டுகிறான்.’ அதன் பின் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யா அல்லாஹ், உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே, எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிதலின் பக்கம் திருப்பு.” [ஸஹீஹ் முஸ்லிம்]

செயல் குறிப்பு: உங்களுடைய நம்பிக்கை, உங்கள் ஈமான், இவை தான் உங்களுடைய மிகப்பெரிய சொத்து. நீங்கள் முஸ்லிமாக இருப்பதற்க்காக தினமும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுங்கள்.  இமாம் அஹமத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள், ‘யா முகல்லிபல் குலூப், ஸப்பித் கல்பீ அலா தீனிக்’– உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே, என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தில் உறுதியாக இருக்கும்படி செய்வாயாக!” என்ற துவாவை அடிக்கடி ஓதுவார்கள்.  எனவே, மனனம் செய்து உபயோகப்படுத்துங்கள்.

2. சூரிய ஒளியும், மரண பயமும்:

சூரியன் எப்படி மாறுகிறது என்று எண்ணிப் பாருங்கள், ஒரு சமயம் அதன் கதிர்கள் லேசாகவும், இளஞ்சூடாகவும் இருக்கிறது, மறு நிமிடம் ஒரு மேகத்துக்குப் பின் மறைந்து, சூழ்நிலையையே மாற்றி விடுகிறது.  உங்களை அடக்கம் செய்யும் நேரம் வந்து விட்டது, மக்களின் தோள்களில் தூக்கப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?  இந்நாளைப் பற்றி என்றாவது யோசித்ததுண்டா? உங்கள் ஆன்மா உங்களிடமிருந்து பிரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபு சயீத் அல் குத்ரி (ரலி) கூறினார்கள்: “ஒரு இறந்தவர் அடக்கம் செய்ய வேண்டிய நிலையில், மக்கள் அவரைத் தங்கள் தோள்களில் தூக்கும்போது, அவர் நல்ல மனிதராக இருந்தால், அவர் கூறுவார்: ‘என்னை எடுத்துச் செல்லுங்கள்!’என்று.  அவர் தீயவராக இருந்திருந்தால், ‘என்னுடைய கேடே! என்னை எங்கே எடுத்துச் செல்லுகிறீர்கள்?’என கேட்பார். அவருடைய குரல் மனிதர்களைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் கேட்கும்; மனிதர்கள் அதைக்கேட்டால், மயங்கி விழுந்து விடுவார்கள். [ஸஹீஹ் அல் புகாரி, அஹமத்]

உடலானது உணவு, உறக்கம், ரத்தம், அழுகை எல்லாம் தேவைப்படும்  இந்த கீழ் உலகின்,  பொருளிலிருந்து செய்யப்பட்டது. அதனால் நீங்கள் அதை இங்கேயே விட்டு விட வேண்டியது தான். ஆனால், ஆன்மா மேலுலகைச்சேர்ந்தது, அதன் தேவை ஒன்றே ஒன்று தான்: அது அல்லாஹ்வுடன் இருப்பது.

செயல் குறிப்பு: அல்லாஹ் நல்ல ஆன்மாவை திரும்ப அழைக்கும், கண்ணீர் வரவழைக்கும் இந்த வசனத்தைப்படித்து மனனம் செய்து கொள்ளுங்கள்: “அமைதியடைந்த ஆத்மாவே, நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன் மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.  நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும் நீ என் சொர்க்கத்தில் நுழைவாயாக! [குர்ஆன் - 89:27-30]

3. தளருவதும், சிறு பாவங்களைப்பற்றிய அச்சமும்:

வானிலை நன்றாக இருக்கும்போது, மக்கள் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக்கொள்ளுங்கள், ஒரு உண்மை விசுவாசி, பெரும்பாவங்களைச் செய்வதற்கு எவ்வளவு அஞ்சுவானோ, அதே அளவு சிறு பாவங்களைச் செய்வதற்கும் அஞ்சுவான்!  நபி (ஸல்) அவர்கள் முஆதுக்கு அறிவுரை சொன்னார்கள்: ‘நீங்கள் எங்கிருந்தாலும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். ஒரு பாவத்தைத் தொடர்ந்து ஒரு நன்மையைச் செய்யுங்கள், அது உங்கள் பாவத்தை அழித்துவிடும். மக்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள். [திர்மிதி]

செயல் குறிப்பு: நீங்கள் ஒரு தீய செயலைச் செய்து விட்டால், அதன்பின் எத்தனை நற்காரியங்கள் செய்ய முடியுமோ அத்தனை செய்யுங்கள், ஸதகா கொடுங்கள், யாருக்காவது உணவு எடுத்துச் சென்று கொடுங்கள், யாருக்காவது உதவி செய்யுங்கள், உபரித்தொழுகை தொழுங்கள், நல்ல சொற்பொழிவைக் கேளுங்கள்; ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி, மன உறுத்தலில் வீழ்ந்து கிடக்காதீர்கள். உடனே எழுந்து நற்செயல்கள் செய்ய விரையுங்கள்!

4. இவ்வுலக மரங்களும்சொர்க்கத்து மரங்களும்:

நீங்கள் என்றாவது இங்குள்ள மரங்களைப் பார்த்து சொர்க்கத்து மரங்கள் எப்படி இருக்கும் என வியந்திருக்கிறீர்களா? சொர்க்கத்தின் மரங்கள், பருவத்தில் மட்டும் பழம் தரும் இங்குள்ள மரங்களைப் போலில்லாமல், இடைவிடாது பழங்களையும் நிழலையும் தரும்: பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது – அதன் கீழ் நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிகொண்டிருக்கும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானவை…” [குர்ஆன் - 13:35]

இப்னு கசீர் (ரஹ்) தன்னுடைய தஃப்சீரில் ஒரே பழத்தில் 70 வகை ருசிகளும், நிறங்களும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்கள்.  “நீங்கள் தூபாவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சொர்க்கவாசிகளின் ஆடைகளுக்கு துணியைத் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய மரம் அது.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் இருக்கும் தூபா மரம் நூறு வருட பயண தூரம் அளவு பிரம்மாண்டமானது. இதன் மலரின் புற பாகங்களிலிருந்து தயார் செய்யப்படுகிறது.” [ஸில்ஸிலத் அல் ஹதீத் அஸ் ஸஹீஹா] அதன் அளவை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்கள் மேலே கூறினார்கள்: பிறகு, நான் சித்ரதுல் முன்தஹாவை அடையும் வரை அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு, ஹஜருடைய மண் ஜாடிகளை ஒத்த அதன் நப்ஃக்கைக் (பழங்கள்) கண்டேன், அதன் இலைகள் யானையின் காதுகளை ஒத்திருந்தன, அதன் ஒரு இலையினால் இந்த முழு உம்மத்தையும் மூடியிருக்க முடியும். வர்ணிக்க முடியாத நிறங்களால் மூடப்பட்டிருந்தது. அதன் பின், நான் சொர்க்கத்தில் நுழைந்தேன், அதன் விளக்குகள் முத்துக்களாகவும், அதன் மணல் கஸ்தூரியாகவும் இருந்தது. [ஸஹீஹ் அல் புகாரி, முஸ்லிம்] அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘சொர்க்கத்தில், எந்த மரமும் தங்கத்தால் செய்யப்பட்ட தண்டு இல்லாமல் இல்லை[இப்னு ஹிப்பான், திர்மிதி]

செயல் குறிப்பு: ஒவ்வொரு வினாடியும், நீங்கள் பஸ்ஸில் இருக்கும்போது, வீட்டு வேலை செய்யும்போது, குழந்தைகளைக் கவனிக்கும்போது, அலுவலகத்தில் இருக்கும்போது, ‘சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்’ என சொல்லி உங்களுக்கு சொர்க்கத்தில் சொத்தைச் சேருங்கள்!

நபி இப்ராஹீம் (அலை), முஹம்மது நபி (ஸல்) அவர்களை இரவுப் பயணத்தில் (இஸ்ராவில்) கண்டபோது, இந்த உம்மத்தினருக்கு தன் ஸலாமைத் தெரிவிக்கும்படியும், அவர்கள் சொர்க்கத்து மரங்களில் தங்கள் பங்கை எப்படி அதிகரிப்பது என்றும் சொல்லிக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் இப்ராஹீம் நபியைச் சந்தித்தேன், அவர்கள் கூறினார்கள், ‘முஹம்மதே, உம்மக்களிடம் கூறுங்கள், சொர்க்கம் என்பது நல்ல மணலும், இனிமையான நீரும் உள்ள ஒரு இடம். அது, ‘சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்’ இவற்றால் பயிரிடப்படும் ஒரு வெற்றிடம்.’ [திர்மிதி]

5. உங்களுக்குப் பிரியமானவர்களுடன் சூரிய ஒளியில் உல்லாசப் பயணமும், இருளில் தனித்திருப்பவர்களும்:

தோட்டத்தில் மகிழ்ச்சியை அனுபவித்துக்கொண்டிருக்கும் நாளில், சூரிய ஒளியை வருடக்கணக்காக உணராதவர்களைப்பற்றி எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு சுவர்களுக்குள், பேசுவதற்கு யாருமில்லாமல், தம் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு, சில சமயம், துன்புறுத்தப்பட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டு, கொலையுறும், நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளும், இருக்கிறார்கள்.

ஸதகா கொடுக்கும்போது நாம் எப்போதும் ஏழைகளையும், அனாதைகளையும் தான் நினைக்கிறோம். ஆனால், சிறைவாசிகள் உங்கள் பட்டியலில் ஏன் இல்லை?  அல்லாஹ் கூறுகிறான்: ‘மேலும், அ(வ்விறை)வன் மேலுள்ள பிரியத்தால், ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.’ [குர்ஆன் - 76:8]

சிறைவாசிகளுக்கு உதவுவது அல்லாஹ்வை நெருங்கக்கூடிய வழிகளில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்னு தைமியா (ரஹ்) கூறினார்கள்: [அல் ஃபதாவா28/635]:

“கைதிகளை விடுதலை செய்வது மிகப்பெரிய கட்டாயமான செயல். அவர்களுக்கு ஈட்டுத்தொகை கொடுப்பது மற்றும் பிற உதவிகள் செய்வது எல்லாம், அல்லாஹ்வை நெருங்கக்கூடிய வழிகளில் மிக உன்னதமானவை.”

செயல் குறிப்பு: ரமதானுக்கு முன்னால், நான் என்னையும் உங்களையும், ஒரு சிறைவாசிக்கு ஒரு கடிதமாவது எழுதும்படி வற்புறுத்துகிறேன். பிறகு பாருங்கள், அது உங்களுடைய மற்றும் அவர்களுடைய ஈமானுக்கு என்ன செய்கிறது என்று!

 

குறிப்பு: www.muslimprisoners.com என்ற வலைதளத்துக்குச் சென்று, மின்னஞ்சலில் ஒரு கடிதம் (மிக எளிது!) அனுப்புங்கள். சிறைவாசிகளைப் பற்றி அறிய www.cageprisoners.com என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொண்டால், உங்களுக்கு செய்திக்கடிதம் வரும். ஒவ்வொரு நாளும், சிறையிலுள்ள உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக, சிறுவர்களுக்காக, அவர்களுக்கு பொறுமை(ஸபர்)யைத் தரவும், விரைவில் விடுதலை பெறவும், அவர்களுடைய வேதனைகளை லேசாக்கவும் அல்லாஹ்விடம் துவா செய்ய மறந்து விடாதீர்கள்.

அல்லாஹ் (சுபஹ்) நாம் இந்த ஐந்து செயல்களையும் அவனுக்காக மட்டும், அவனுடைய அழகிய பொருத்தத்தை நாடி செய்ய உதவி செய்வானாக. நம் அனைவரையும் மிக உயர்ந்த சொர்க்கத்தில் மீண்டும் ஒன்று சேர்ப்பானாக! ஆமீன்.

நீங்கள் நன்மையடைய பிரார்த்திக்கிறேன்.

கவ்லா பிந்த் யஹ்யா – யு.கே. 


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online