Select a page

“சுபஹானல்லாஹி வ பிஹம்திஹி” என்று கூறுங்கள்

NL0235

ஒரு நாளைக்கு எத்தனை முறை நாம் பாவம் புரிகிறோம்?

நம்முடைய சிறு பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதற்கு, சில நிமிடங்கள் செலவழித்து, தினமும் சொல்லக்கூடிய ஏதாவது ஒன்று இருந்தால்..?

இதைத்தவிர, இன் ஷா அல்லாஹ், ஒரு சுன்னத்தை புதுப்பித்ததற்காகவும் உங்களுக்கு நற்கூலி கிடைப்பதை கற்பனை செய்து பாருங்கள்!
எப்படி?

ஒவ்வொரு நாளும் 100 முறை “சுபஹானல்லாஹி வ பிஹம்திஹி” என்று கூறுவதால்!
இப்போது, நியாயத்தீர்ப்பு நாளன்று உங்களுடைய தராசு மலையளவு நன்மைகளால் கனப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த நன்மைகள் எங்கிருந்து வந்தன?

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும். (அவை:)

1. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [முஸ்லிம்]

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (அந்த) வார்த்தையை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினேன். அதற்கு, “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்பதாகும்” என்று கூறினார்கள். [முஸ்லிம்]

இந்த ஹதீஸ்களை பல முறை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், அதை தினமும் மறக்காமல் செய்கிறீர்களா?

இன்றிலிருந்தூ:
– ஒரு சுவற்றிலோ, ஃபோனிலோ உங்களுக்கு நினைவூட்டல்களை வையுங்கள்.
– 100 முறையும் ஒரே நேரத்தில் கூறலாம், அல்லது நாள் முழுதும் விட்டு, விட்டு சொல்லலாம்.
– குழந்தைகளுடன் இந்த அழகிய சுன்னத்தை – 100 முறை கூறுவதன் மூலம் கற்றுக்கொடுங்கள்!

நீங்கள் பயன் பெற பிரார்ரத்திக்கிறேன்,
அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் தமிழ் குழுமம்


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online