Select a page

ஜக்கரிய்யா (அலை) அவர்களிடமிருந்து 6 துவா உத்திகள்

say_salam1

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

குர்’ஆனின் பத்தொன்பதாவது அத்தியாயமான ‘சூரா மர்யம்’ என அழைக்கப்படுகிறது. ஆனால், வியக்கத்தக்க வகையில் அது ஜக்கரிய்யா (அலை) அவர்களுடைய வரலாறுடன் தொடங்குகிறது. ஏன்?

ஈஸா (அலை) அவர்களுடைய பிறப்பு, உண்மையிலேயே அற்புதமானது. அது எத்தனை அற்புதமானதென்றால், கிறிஸ்தவர்கள் அவர் இறைவனின் மகன் என்ற முடிவுக்கே வந்து விட்டார்கள் – இல்லையென்றால், ஒரு தந்தையில்லாமல் மர்யம் (அலை) அவரைப் பெற்றெடுத்ததற்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும்?

கிறிஸ்தவர்களை பிரதானமாக அழைத்துப் பேசும் சூரா மர்யம், இந்த கருத்தை ரத்து செய்த வண்ணம் தொடங்குகிறது. ஒரு வயதான, பலவீனமான, நரைத்த முடிகளுடைய முதியவரை கற்பனை செய்யுங்கள். அவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாத ஒரு மனைவி இருக்கிறாள். அவர் ஒரு மரியாதைக்குரிய, முக்கியமான மனிதர் – உண்மையில் ஒரு நபி. அவருடைய மக்களின் மார்க்க விஷயங்களையும், மஸ்ஜிதுல் அக்ஸாவையும் கவனித்துக் கொள்வது அவருடைய பொறுப்பு. இது சாதாரண பொறுப்பல்ல.

அவருக்கு வாரிசு இல்லாததால், இந்த கனமான பொறுப்பு தவறான கைகளுக்குப் போய் விடுமோ என அவர் அஞ்சியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உண்மையிலேயே, அவர் மிகவும் கவலையுடனிருந்தார். இந்நிலையில் அவர் அல்லாஹ் அஸ்ஸவஜலிடம் உதவி கேட்கிறார்.

அவர் மிக அழகாகவும், உயர்வாகவும் கேட்டதை அல்லாஹ் அஸ்ஸவஜல் குர்’ஆனில் ஒரு இடத்திற்கு மேல் அதை விளக்கியுள்ளான். இன் ஷா அல்லாஹ், நாம் நமக்காக துவா செய்யும்போது, இந்த சிறப்பான துவாவின் சாரத்திலிருந்து நாம் வெகுவாக பயன்பெறக்கூடிய சில குறிப்புகள் இதோ.

காஃப், ஹா, யா, ஐன், ஸாத்(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும். அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் (நிதாஅன் ஹஃபிய்யா) பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). [அல் குர்’ஆன் 19:1-3]

1. நிதா’- இதன் பொருள், தவிப்புடனும், தேவையுடனும் அழைத்துக் கேட்பது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலைகளில் நாம் இப்படித்தான் நாம் நேசிப்பவர்களை அழைப்போம். உதாரணமாக, ஒரு தாய் வெளிநாட்டுக்குச் செல்லும் தன் ஒரே மகனை வழியனுப்பும்போது, பாதுகாப்பாக இருக்கும்படியும், அவனுடைய உடல்நலத்தைப் பற்றி தனக்கு அடிக்கடி தெரிவிக்கும்படியும் வேண்டிக்கொள்வாள். இன்னொரு உதாரணம், ஒரு சூடான சண்டைக்குப் பின் உங்கள் அன்பான துணைவர் உங்களை விட்டு போகப்போகிறார், அப்போது, தவிப்புடன், “தயவு செய்து போகாதீர்கள்!” என கதறுவீர்கள். இதைப் போன்ற உணர்வு தான் ‘நிதா’ என்ற சொல்லில் உள்ளது, மேலும், நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் அதைத் தான் கொண்டு வர வேண்டும்.

2. ஹாஃபிய்யா – அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவன் என்பதில் ஜக்கரிய்யா (அலை) மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவனை அவர் தனிமையில் தாழ்ந்த குரலில் கேட்டது இந்த உண்மையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம். தன்னுடைய அதிபதி எங்கிருந்தாலும் செவியேற்பவன் என்பதில் ஜக்கரிய்யாவுடைய இந்த உறுதி, வானவர்கள் அவரிடம் வந்து அல்லாஹ் அவருடைய துவாவை ஏற்றுக் கொண்ட நற்செய்தியைக் கூறியபோது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. வானவர்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக அவர் அல்லாஹ்வுக்கு நேரடியாக பதிலளிக்கிறார்.

மேலும், அல்லாஹ்வைத் தனிமையில் பிரார்த்திப்பது நாம் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக அல்லது ரியா என்ற பாவத்திலிருந்து நம்மைக் காக்கும்.

(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! … [அல் குர்’ஆன் 19:4-5]

3. அவர் துவாவைத் தொடங்கும் முறையைப் பாருங்கள். தனக்கு வேண்டியதை நேரடியாக அவர் கேட்கவில்லை. மாறாக, தன்னுடைய பிரச்சினைகளை விளக்குகிறார், அல்லாஹ்விடம் தன் பயங்களையும், கவலைகளையும் கூறுகிறார்.

4. ரப்பீ – என்னுடைய அதிபதியே, அன்பு மற்றும் நெருக்கமாக அல்லாஹ் அஸ்ஸவஜலை அழைக்கும் முறை – ரப்புக்கும், அடிமை (அப்து)க்கும் உள்ள உறவைக் காட்டுகிறது.

ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக! [அல் குர்’ஆன் 19:5-6]

5. துவாவுடைய காரணத்தை விளக்குவது: தன் மரணத்திற்குப் பின்னால் அல்லாஹ்வுடைய தீன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறார்.

6. ‘யாகூப் (அலை) அவர்களுடைய குடும்பத்திற்கும்’ – அவருடைய வார்த்தைகளில் அவர் எத்தனை கவனமாக இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள் – யாகூப் (அலை) அவர்களின் சந்ததிகளில் எல்லோரும் வாரிசாவதற்கு தகுதியானவர்களாக இல்லை. அவர்களில் சிலர் தீயவர்களாகவும் இருந்தார்கள்.

துவாவின் விளைவு
இங்கு தான் கிறிஸ்தவ நம்பிக்கை தகர்க்கப்படுகிறது. அல்லாஹ் அஸ்ஸவஜல் மிகவும் வயதானவருக்கும், ஒரு மலட்டுப் பெண்ணுக்கும் ஒரு குழந்தையைத் தருகிறான். ஈஸா (அலை) அவர்களுடைய பிறப்பு தந்தையின்று பிறந்ததால், அதிசயமானது, ஜக்கரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை), ஒரு இரட்டை அதிசயம் – அவருடைய பெற்றோர் இருவருமே குழந்தை பெறும் சக்தியற்றவர்களாக இருந்தார்கள். இருப்பினும், அல்லாஹ் இந்த நடக்க முடியாதது போல் தோன்றிய இந்த துவாவுக்கு கூட பதிலளித்தான். உண்மையில் அவன் கூறியது:

இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான். [அல் குர்’ஆன் 19:9]

அதனால், உங்களுடைய சில்லறை பிரச்சினைகளைப் பற்றி கவலைப் படுவதை நிறுத்தி விட்டு, ஜக்கரிய்யா (அலை) செய்தது போல், அல்லாஹ்விடம் உதவி கேட்டால் என்ன?

அண்டர்ஸ்டாண்ட் குர்’ஆன் தமிழ் குழுமம்
www.understandqurantamil.com


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online