Select a page

துல் க’தாவும் நீங்களும்

project-813-body-kabaa1

இஸ்லாமிய மாதங்கள்

நாம் துல் க’தா மாதத்தை அடைந்து விட்டோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?  நான்கு புனிதமான மாதங்களில் முதல் மாதம் துல் க’தா (அல் அஷ்ஹுர் அல் ஹுரும்).  மற்ற மூன்றும், துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மற்றும் ரஜப்.  இந்த நான்கு மாதங்களும் சூரா தவ்பாவில், 36ஆவது வசனத்தில் (9:36) குறிப்பிடப்பட்டுள்ளன.  இந்த புனித மாதங்களில் செயல்களுக்கான வெகுமதிகளும், தண்டனைகளும் பன்மடங்காக்கப்படுகின்றன, சுபஹானல்லாஹ்!

 

குறிப்பாக, அல்லாஹ் (அஸ்ஸவஜல்), இந்நாட்களில் நமக்கு நாமே அநீதி இழைப்பதைப் பற்றி எச்சரிக்கிறான்.

துல் க’தாவை “உட்காருதல்” அல்லது “ஓய்வாக இருத்தல்” என மொழிபெயர்க்கலாம்.  ஏனென்றால், மக்கள் அம்மாதத்தில் ஒருவரோடொருவர் போர் செய்வதை நிறுத்தி விடுவார்கள்.  வாக்குவாதங்களையும், மன சங்கடங்களையும் நிறுத்துவதற்கு இது ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்!

இஸ்லாமிய மாதங்கள் நிலவின் (கமரி மாதங்கள்) இயக்கங்களின் அடிப்படையில் உள்ளன.  இருப்பினும், ஆண்டுக்கணக்கு, இஸ்லாமிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இருந்த ஹிஜ்ரா[நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு, மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்ற நிகழ்வு]விலிருந்து தொடங்குகிறது. அதனால் அது ‘ஹிஜ்ரி நாள் காட்டி’ என அழைக்கப்படுகிறது.  உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து இது நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்த புனித மாதம் உங்களுக்கு என்னவாக இருக்கிறது?

[وقال علي بن أبي طلحة، عن ابن عباس قوله: {إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا} الآية {فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ} في كلِّهن، ثم اختص من ذلك أربعة أشهر فجعلهن حراما، وعَظم حُرُماتهن، وجعل الذنب فيهن أعظم، والعمل الصالح والأجر أعظم]

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்’ என்பதிலிருந்து, ‘ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்;’ என்பது வரையுள்ள வசனத்தைப் பற்றி அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்,  அல்லாஹ் (சுபஹ்), எந்த மாதத்திலும் என்று கூறிய பிறகு, அவன் அவற்றில் நான்கு மாதங்களைக் குறிப்பிட்டு அவற்றை புனிதமானவைகளாக செய்து, அவற்றின் புனிதத்தை வலியுறுத்துகிறான்.  மேலும், அம்மாதங்களில் செய்யப்படும் பாவங்களின் தண்டனையை அதிகரித்து, நற்செயல்களின் நற்கூலியையும் அதிகமாக்கியுள்ளான்.” என விளக்கம் கூறினார்கள்.   [தஃப்சீர் இப்னு கஸீர் 4/148]

வரிசையாக வரும் மூன்று புனிதமிக்க மாதங்களின் முதல் மாதம் துல் க’தா.  அதைத் தொடர்ந்து துல் ஹிஜ்ஜாவும், முஹர்ரம் மாதங்களும் வருகின்றன.  இதன் பொருள், அடுத்த மூன்று மாதங்களும் நீங்கள் செய்யும் நற்செயல்களுக்கு அதிகமான கூலியும், நீங்கள் புரியும் பாவங்களுக்கு அதிகமான தண்டனையும் கிடைக்கும் காலம் என்பதாகும்!

 

தனிப்பட்ட முறையில் செய்யக்கூடிய செயல்கள்:

 • என்னையும், என்னுடைய இபாதத்துக்களையும் கவனிப்பேன்.  ரமதானுக்குப் பிறகு என்னுடைய ஈமான் குறைந்து விட்டதா?
 • அப்படியானால், அதை மீண்டும் பெறுவதற்கு இது தான் தருணம், இன் ஷா அல்லாஹ்!
 • நான் ஒரு பாவம், அல்லது தீய சொல்லை சொல்வதற்கு முன்னால், இது ஒரு புனித மாதம் என எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன்.
 • என்னுடைய தொழுகை விஷயத்தில் ஒரு விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முயல்வேன்.  ஐவேளைத் தொழுகை நேரத்திலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், தொழுவதற்காக, அதை உடனே நிறுத்தி விடுவேன்.  எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், தொழுகையை விட முக்கியமானது எதுவுமே இல்லை.
 • என் பெற்றொருடன் எனக்குள்ள உறவைக் கவனிப்பேன்.  அவர்களிடம் குரலை உயர்த்தாமல் இருக்க முயற்சிப்பேன்.  அவர்களைப் புன்னகைக்க வைப்பேன், அவர்களுக்குக் கீழ்ப்படிவேன், அவர்களை மகிழ்விப்பதற்காக என்னுடைய எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
 • விருப்ப தர்மம் செய்வேன்.  ரமதானின் உணர்வுகளுக்காக ஏங்குகிறீர்களா?  தர்மம் செய்யுங்கள்.  அதே சமயம், அருகில் இருப்பவர்களுக்கும் ஏதாவது செய்யுங்கள்.  உங்களுடைய தர்மத்தை பல வழிகளிலும் செய்யுங்கள்.
 • நான் குர்’ஆனின் பக்கம் கவனம் செலுத்துவேன்!
 • இன் ஷா அல்லாஹ், ஒவ்வொரு நாளும் குர்’ஆனைத் திறந்து சில வசனங்களை ஓதும்போது நான் ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் கூடுதல் நன்மை கிடைக்கும்.  குர்’ஆன் ஒலிநாடாக்களை ஒலிக்க வைத்து, குடும்பத்துடன் ஓதுவேன்.
 • என்னுடைய வாழ்க்கைத்துணைக்காக கூடுதல் முயற்சிகள் எடுப்பேன்.
 • என்னுடைய ரமதான் து’ஆக்களை எடுத்து, மீண்டும் ஓத ஆரம்பிப்பேன்.  தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் ஒதுக்கி, அமர்ந்து, முழு கவனத்துடன் து’ஆ செய்வேன்.  ஏனென்றால், நான் கேட்கும் ஒவ்வொரு து’ஆவுக்கும் எனக்கு நற்கூலி கிடைக்கும், இன் ஷா அல்லாஹ்!
 • நான் இன்னும் அதிகமான நேரத்தை திக்ரு செய்வதில் கழிப்பேன்.  என்னுடைய நேரத்தை பயனுள்ள வழியில் கழிக்க எனக்கு நினைவுபடுத்திக் கொள்வேன்.  பகலில் வேலைகளில் ஈடுபடும்போது அதிகதிகமாக, ஸுபஹானல்லாஹி வ பிஹம்திஹி, ஸுபஹானல்லாஹில் அஸீம், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், போன்றவற்றை ஓதிக் கொண்டிருப்பேன்.

இப்போது நான் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி, இக்கால கட்டத்தில் என்னுடைய நற்செயல்களை  அதிகரித்து, கெட்ட பழக்கங்களையும், தீச்செயல்களையும் ஒழிக்க கடுமையாக முயல்வதற்கு அல்லாஹ் அஸ்ஸவஜலுடைய தவ்ஃபீக்கை யாசிக்கிறேன்.

நீங்கள் பயனடைய பிரார்த்திக்கிறேன்.

சகோதரி கவ்லா பிந்த யஹ்யா – யு.கே.

0 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online