Select a page

துல் ஜலாலி வல் இக்ராம் – மிக்க வல்லமையும், கண்ணியமும் உடையவன்

Jaalali

அல்லாஹ் தன்னை துல் ஜலாலி வல் இக்ராம் – மிக்க வல்லமையும், கண்ணியமும் உடையவன், கம்பீரம் மற்றும் கொடைத்தன்மையின் அதிபதி என குர்’ஆனில் இரு இடங்களில் குறிப்பிடுகிறான்.
அவன் தான் புகழ், கம்பீரம், உயர்வு, தாராளம், கௌரவம் அனைத்திற்கும் உரிமையாளன்.  துல் ஜலாலி வல் இக்ராம், மகத்துவம் மற்றும்  பெரும் வளத்தின் ஆதாரம்.!

மேன்மை மற்றும் கம்பீரத்தின் உரிமையாளன், கொடைத்தன்மை மற்றும் பெருந்தன்மையின் அதிபதி

மூன்று கருத்துக்களைக் குறிக்கும் ஜீம்-லாம்-லாம் என்ற வேரெழுத்துக்களிலிருந்து ஜலால் என்ற பெயர் பிறக்கிறது. முதல் கருத்து, புகழ், கம்பீரம். இரண்டாவது கருத்து, உயர்வு, மேன்மை,  சுதந்திரமாக இருத்தல், மூன்றாவது கருத்து, மிக்க மகத்துவம் பெற்றிருத்தல்.  இந்த வேர்ச்சொல் குர்’ஆனில் இரு இடங்களில், ஜலால் என்ற பெயர்ச்சொல்லாக, வருகிறது.  உதாரணம், அல் ஜலாலி (மாட்சிமை).

இக்ராம், கரீம், அக்ரம்  இவையனைத்தும் நான்கு கருத்துக்களைக் குறிக்கும் காஃப்-ரா-மீம்என்ற எழுத்துக்களிலிருந்து பிறக்கிறது.  முதல் கருத்து, தாராளம், கொடைத்தன்மை, கருணை.  இரண்டாவது, மிக உயர்ந்த மரியாதை, மதிப்பு, கண்ணியத்துக்குரியது, மூன்றாவது, மிக அருமையானது, விலையுயர்ந்தது, அருமையானது. நான்காவது கருத்து, மிக அமோகமானதும்,  ஆக்கத்திறன் மிக்கதும். இந்த வேரெழுத்துக்கள் குர்’ஆனில் 47 முறை 8 வருவித்த வடிவங்களில் இடம்பெறுகின்றன.  உதாரணம், அல் அக்ரம் (மிக தாராளமானவன்), கரீமுன் (உயர்பண்புடையவன்), கிராமன் (கண்ணியமானவர்கள்), அல் இக்ராம் (மரியாதை).

மொழிரீதியாக,  து அல்லது தூ ஒரு சுட்டுப்பெயர்.  அரபி மொழியில் இதன் பொருள் – அதில், மேலே, உடன், உள்ள.  துல் ஜலாலில், ‘து’ அல்லாஹ் முழுமையான உரிமையாளன், உடைமை பெற்றவன், அல் ஜலால் – கம்பீரம் மற்றும் புகழுக்கு உரிமையாளன் என்பதைக் குறிக்கிறது.   வல் இக்ராம் என்றால், ‘’ – மேலும், அல் இக்ராம், தாராளத்தன்மை. கரீம்  ஒரு அடைமொழி இக்ராம் ஒரு வினைப்பெயர்.

அல்லாஹ் இந்த மிக அழகிய இரு தன்மைகளுக்கும் அதிபதி.  துல் ஜலாலி வல் இக்ராம் மிகவும் அருமையான கண்ணியத்துக்குரியவன், அவன் கமீரமான, புகழ்மிக்க அதிபதி, எல்லா கொடைத்தன்மைகளுக்கும், அருள்களுக்கும்,  வெகுமதிகளுக்கும் உரிமையாளன்!

துல் ஜலாலி வல் இக்ராம் கூறுகிறான்: மிக்கசிறப்பும், கண்ணியமுமுள்ளஉம்முடையஇறைவனின்திருப்பெயர்மிகவும்பாக்கியமுடையது[அல் குர்’ஆன் 55:78]

அல்லாஹ்வின் கண்ணியமிக்க முகம்

சூரா அர்ரஹ்மானில் அல்லாஹ், பூமியில் உள்ள எல்லோரும், எல்லாமும் அழிந்து, அவனுடைய கண்ணியமிக்க முகம் மட்டும் நிலைத்திருக்கும் ஒரு நேரத்தைப் பற்றி குறிப்பிடுகிறான்.  ஏனென்றால், அவன் என்றும் வாழ்பவன், மரணிக்காதவன்.  அல்லாஹ் தன் முகத்தை இங்கு துல் ஜலாலி வல் இக்ராம் என வர்ணிக்கிறான்.  அஷ்ஷாபி கூறியுள்ளார்கள், ‘நீங்கள் பூமியில் உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே’ [அல் குர்’ஆன் 55:26] என்பதை ஓதியபின் நிறுத்தி விடாமல், தொடர்ந்து, மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.[அல் குர்’ஆன் 55:27]என்பதையும் ஓதுங்கள்.’ என கூறினார்கள்.  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், துல் ஜலாலி வல் இக்ராம் என்பதின் பொருளைப் பற்றி, “மேன்மை மற்றும் புகழின் உரிமையாளன்’ என கூறியுள்ளார்கள்.  [தஃப்ஸீர் இப்னு கஸீர்].

இப்பெயரின்படி நீங்கள் எப்படி வாழ்வது?

1.      துல் ஜலாலி வல் இக்ராமுடைய முகத்தைத் தேடுங்கள்.

அல்லாஹ் தன்னுடைய புனிதமான முகத்தை துல் ஜலாலி வல் இக்ராம் என வர்ணிக்கிறான்.  அவன் மட்டுமே வணக்கத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன்.  நீங்கள் செய்யும் அனைத்திலும் அவனுடைய முகத்தைத் தேடுவதை குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுங்கள்.(நபியே!) எவர்தம்இறைவனுடையதிருப்பொருத்தத்தைநாடியவர்களாககாலையிலும், மாலையிலும்அவனைப்பிரார்த்தனைசெய்துகொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன்நீரும்பொறுமையைமேற்கொண்டிருப்பீராக! [அல் குர்’ஆன்  18:28].  உதாரணமாக, யாருக்காவது உதவி செய்தால் அல்லது எதையாவது கொடுத்தால், அதை அவர்கள் புகழ்வார்கள் என்பதற்காக இல்லாமல், அல்லாஹ்வின் திருப்தியை நாடி மட்டும் செய்தல். தர்மம் செய்பவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவது போல், ‘உங்களுக்குநாங்கள்உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின்முகத்திற்காக (அவன்திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்துபிரதிபலனையோ (அல்லதுநீங்கள்) நன்றிசெலுத்தவேண்டுமென்பதையோநாங்கள்நாடவில்லை(என்றுஅவர்கள்கூறுவர்). [அல் குர்’ஆன் 76:9] உங்களிடமிருந்து உதவி பெற்ற ஒருவர் நன்றியுடன் நடந்து கொள்ளாவிடில், உங்களுக்கு கோபம் வருகிறதா அல்லது பாதிக்கப்படுகிறீர்களா என்று உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளலாம். பிறகு, அல்லாஹ்வின் முகத்துக்காக மட்டும் செய்ய வேண்டும் என நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  அவன் எல்லா செயல்களையும் பதிவு செய்கிறான், மக்கள் நன்றி சொல்கிறார்களா இல்லையா என்பது பொருட்டல்ல.

2. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் துல்ஜலாலி வல் இக்ராமை நினைவு கூருங்கள்.

ஒரு நபிவழியைப் பின்பற்றி, தொழுகைக்குப் பின் இந்த திக்ரை ஓதுவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறுங்கள்.  ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பின்படி, “நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்தபின், اللْهُمَّأَنْتَالسَّلَامُوَمِنْكَالسَّلَامُ،تَبَارَكْتَيَاذَاالْجَلَالِوَالْإِكْرَام‘அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வ மின்கஸ்ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம் (யா அல்லாஹ் நீயே சாந்தி, உன்னிடமிருந்தே சாந்தி வருகிறது. அருள் பெற்றவன் நீ, யாதல் ஜலாலி வல் இக்ராம்)”  கூறும் வழக்கம் உள்ளவராக இருந்தார்கள்.” [முஸ்லிம்].

3. தாராளமாக இருங்கள்.

கொடைத்தன்மையின் அதிபதியான அல்லாஹ் (சுபஹ்) நீங்கள் மற்றவர்களிடம் கரீமாக (தாராளமாக) இருப்பதற்கு உந்துதலாக இருப்பானாக. நபி (ஸல்) அவர்கள் கூறியது போல், தாராளமானவர்கள் அல்லாஹ்வுக்கும், மக்களுக்கும் மிகவும் நெருக்கமானவர்கள்,  நரக நெருப்பிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள். [அத்திர்மிதி]

 4. மூலத்தை அடையாளம் காணுங்கள்.

மக்களிடமிருந்து அன்பளிப்புகள் அல்லது உதவி அல்லது பயன் பெறும்போது, இந்த வளங்களின் ஆதாரம் துல் ஜலாலி வல் இக்ராம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  அதனால், ஒரு அன்பளிப்பு அல்லது உதவி கிடைக்கும்போது, mமுதலில் நீங்கள் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்லி எல்லா அருட்கொடைகளும் யாரிடமிருந்து வருகிறதோ அந்த கொடையாளனைக் கௌரவப்படுத்துங்கள்.  பிறகு, கொடுத்த மனிதருக்காக ‘ஜஸாக்கல்லாஹு கைரன்’ (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக’ அல்லது ‘பாரக்கல்லாஹு ஃபீக்’ (அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக) என்று துவா செய்யுங்கள்.

5. துல்ஜலாலி வல் இக்ராமைக் கேளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய மிக அழகிய பெயர்களைக் கொண்டு அவனை அழைப்பது மிகவும் பயனுள்ளது என்று ஊக்குவித்தார்கள். இப்பெயருடன் நீங்கள் துவாவை ஆரம்பித்தால், நினைவிருக்கட்டும், ‘து’ என்ற எழுத்து ‘த’ என்று மாறும். உதாரணமாக, யா தல்ஜலாலி வல் இக்ராம்.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யா தல் ஜலாலி வல் இக்ராம் என்ற பெயரோடு தொடர்ந்து, விடாப்பிடியாக துவா செய்யுங்கள்.” என்று கூறினார்கள்.  [அஹ்மது, அன்னஸாயீ] அதனால், துவா செய்யும்போது, “யா தல் ஜலாலி வல் இக்ராம்… [பிறகு உங்களுடைய தேவை]…

யா அல்லாஹ், யா தல் ஜலாலி வல் இக்ராம், நீ தான் எல்லா கம்பீரம் மற்றும் அருள்வளங்களின் அதிபதி என்று நாங்கள் அறிவோம்.  எங்களுடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் அனைத்திலும், உன்னுடைய கண்ணியமிக்க முகத்தை மட்டுமே நாடுபவர்களாக நாங்கள் இருக்க உதவுவாயாக.  எங்களுடைய தினசரி வாழ்வில் மற்ற அனைத்திற்கும் மேலாக, உனக்கு கீழ்ப்படிவதற்கு முன்னுரிமை கொடுப்பவர்களாகவும், மற்றவர்களிடம் தாராளமாக நடந்து கொள்பவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக.   மறுமையில் உன்னுடைய முகத்தை காணும் பாக்கியத்தை எங்களுக்கு அருள்வாயாக. ஆமீன்!

*அல் கரீம் என்ற பெயரின்படி வாழ்வது எப்படி என்பதற்கு இங்கே சொடுக்கவும்.

நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் அறிவான்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online