Select a page

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அது தான் நீங்கள்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள். [அல் குர்ஆன் 23:1]

மாஷா அல்லாஹ்! என்னவொரு அற்புதமான உணர்வு! அல்லாஹ் (சுபஹ்) நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான பரிசை மறுமையில் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எத்தனை எளிதானது!  குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் நம்பிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதலை அளிப்பதோடு, நம் வாழ்வு, நடத்தை, பேச்சு, வழிபாடு அனைத்தும் ஒரு உண்மையான விசுவாசியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக எளிதாகவும் அதே சமயம், மிகச் சக்திவாய்ந்த, சிறப்பான செய்திகளாகவும் அளிக்கிறது!

சூரா23, அல் மு’ஃமினூன், ‘நம்பிக்கையாளர்கள்’என மொழிபெயர்க்கப்படுகிறது.  அல்லாஹ் (சுபஹ்) ஒரு உண்மையான விசுவாசியின் தன்மைகளையும் வரையறை செய்துள்ளான். அவருடைய குணம், அவருடைய வழிபாடுகள், தர்மம், பேச்சு, அடக்கம், நேர்மை இவற்றின் மூலம் வெளிப்பட வேண்டும்.

நாம் இப்போது சூரத்துல் மு’ஃமினூனுடைய முதல் பகுதியிலுள்ள எளிதான அதே சமயம் முக்கியமானவைகளான வழிகாட்டுதல்களைப் படித்து முழுதாக அறிந்து, சிந்தித்து, அல்லாஹ்(சுபஹ்)விற்க்காக நடைமுறைப்படுத்துவோம்.

தொழுகை மிகவும் முக்கியமான ஒரு வழிபாடு; உண்மையில் தொழுகை ஒரு விசுவாசியை வரையறை செய்கிறது. அல்லாஹ் (சுபஹ்) மறுமை நாளன்று கணக்குக் கேட்பதில் முதன்மையானவற்றில் ஒன்று தொழுகை. தொழும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகை சற்றே நிறுத்தி வைத்து விட்டு தாழ்மையுடனும், பணிவுடனும் அல்லாஹ்வை நினைவு கூரும்போது அல்லாஹ் (சுபஹ்) மறுமையில் நம்மை நினைவு கூருவான், இன் ஷா அல்லாஹ்.

அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.[அல் குர்ஆன்  23:2]

தொழும்போது நம்முடைய எண்ணத்தை மனதில் தாங்கி, அல்லாஹ்(சுபஹ்)வோடு உரையாட ஆவல் கொண்டு, அந்நேரத்தை அவனுக்கு மட்டுமே அர்ப்பணித்து, நம் மனம், இதயம், ஆன்மா அனைத்திலும் தொழுகை மாத்திரமே முக்கியம் என்பது வியாபித்திருக்க வேண்டும். உங்கள் தொழுகையை உணர்ந்து, உங்களைப்படைத்தவனுடைய கருணையை யாசியுங்கள். மேலும், இது தான் இவ்வுலகில் உங்களுடைய கடைசி தொழுகை என்பது போல் தொழுங்கள்.

‘ஹயா’அல்லது அடக்கம் என்பது, தீய பேச்சைப்போல் பலவற்றைச் சூழ்ந்துள்ளது; தீய பேச்சுக்கள் வெறும் சொற்களுக்கும் மேலானவை, ஏனென்றால், இச்சொற்கள் பெரும்பாலும் புறம் கூறுதலிலும், வம்பு பேசுவதிலும், குறை கூறுவதிலும் முடியக்கூடும் – இவை அனைத்தும் ஒரு வாயிலிருந்து வரக்கூடிய சொற்களால்!

இன்னும் அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். [அல் குர்ஆன் 23:3]

இங்கே அல்லாஹ் (சுபஹ்) நமக்கு வீண் பேச்சு ஒரு கெட்ட பழக்கம் என்பதையும் விசுவாசிகள் அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறான்  மற்றவர்களுடைய பேச்சு மோசமாகவும், கொடுமையானதாகவும் இருந்தாலும்  நாம் அன்பாகவும், பொறுமையாகவும், சமாதானமாகவும் பேச வேண்டும். குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நற்குணம் பொறுமை. நாம் இன்னும் பொறுமையாக இருக்க முயன்றால் நம் நாக்கு மற்றவர்களைக் காயப்டுத்துவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்!

தர்மம் ஒரு விசுவாசியின் மற்றொரு குணம்.  எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் எத்தனை செல்வம் அல்லது பொருட்கள் இருந்தாலும் அல்லாஹ்விற்கு அது ஒரு பொருட்டில்லை என்பதை அறிவார். ஸகாத், நபி (ஸல்) மிகவும் தீவிரமாக எண்ணிய இஸ்லாத்தின் மூன்றாவது தூண்.

ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். [அல் குர்ஆன் 23:4]

யாராவது கேட்டால் மேலே உள்ள துணியைக்கூட கொடுத்து விடக்கூடிய அன்பு மனம் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தது!  அதனால், ஒருவருக்கு அவசரத் தேவை இருக்கும்போது நாம் புறக்கணித்துச் செல்வது எத்தனை முட்டாள்தனம்! அனாதைகள், யாசிப்பவர்கள், வழிப்போக்கர்கள், ஆதவற்றவர்கள் கேட்கும்போது கொடுக்கத்தவறாதீர்கள்.  நினைவிருக்கட்டும், அல்லாஹ்வினால், நாம் பலவிதங்களிலும் சோதிக்கப்படுவோம். அல்லாஹ், யாவற்றையும் காணக்கூடியவன், அறியக்கூடியவன், அதனால் நம்முடைய பேராசையாலும், சுயநலத்தினாலும், சோதனையில் தோல்வியடையக் கூடாது.

ஒரு விசுவாசியின் ஹயாவின் மற்றொரு கோணம், அவர் தன் மானத்தை ஆடையினால் மட்டும் மறைத்துக் கொள்வது போதுமானதல்ல. அவருடைய செயல்களிலும், எண்ணங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். குழப்பத்தை தவிர்ப்பதற்கு, ஆண், பெண், இரு பாலாரும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், கவர்ச்சியாக உடை உடுத்தக்கூடாது, ஆபாசமாகவோ, கவருவது போலவோ பேசக்கூடாது.

மேலும் அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.  [அல் குர்ஆன் 23:5-7]

அல்லாஹ் (சுபஹ்) மிகத்தெளிவான வரையறைகளைத் தருகிறான்.  நாம் அவற்றிலிருந்து விலகக்கூடாது, ஏனென்றால், சபலத்திற்க்கும், ஆபாசத்திற்க்குமான தண்டனை மிகக் கொடுமையானது.  நம் ஆன்மாக்கள், உடல்கள், இதயங்கள், மனங்கள் இவற்றை அல்லாஹ்வை நினைவு கூருவது மூலமும், தீங்கிலிருந்து காக்கக்கூடிய துவாககள் மூலமும், சுவனம் செல்ல முனைவது மூலமும், சபலங்களிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

அல்லாஹ் (சுபஹ்) பலரை நம் வாழ்வில் அருளாகவோ, சோதனையாகவோ வைத்திருக்கிறான். யாவற்றையும் அவன் அறிவான்.  விசுவாசிகளாகிய நம்மை அல்லாஹ் (சுபஹ்) வாக்கைக் காப்பாற்றும்படியும், கடமைகளை நிறைவேற்றும்படியும், மற்றவ்ர்களை நம்பி, அவர்கள் நம்மை நம்பும்படி நம் நடத்தையிலும் நேர்மையாக இருக்க வேண்டும்.

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளைய்யும் காப்பாற்றுவார்கள். [அல் குர்ஆன் 23:8]

ஒவ்வொரு வாக்கையும் காப்பாற்றுவது சிரமம் தான்.  அதனால் தான் என் பாட்டி (அல்லாஹ் அவர்கள் மேல் கருணை பொழிவானாக) நிறைவேற்ற முடியாத வாக்குகளைக் கொடுக்க வேண்டாம் என கூறுவார். ஒரு வாக்கு கொடுக்கும்போது அதைக்காப்பாற்ற மிக உறுதியான எண்ணம் இருக்க வேண்டும், ஏனென்றால், அல்லாஹ் (சுபஹ்)வை நாம் சந்திக்கும்போது நம் எண்ணங்களுக்குக் கூட கணக்கு கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.

ஒரு விசுவாசியை வரையறுக்கக் கூடிய குணமாகஸலாஹ் (தொழுகை)  இரண்டாவது முறையாக குறிப்பிடப்படுகிறது.  நாம் தொழுகையில் பணிவாகவும், பேணுதலுடனும், பக்தியுடனும் இருந்தால் மட்டும் போதாது, ஐவேளைத் தொழுகையையும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) வேணுவார்கள். [அல் குர்ஆன் 23:9]

தொழுகையில் அவசரம் இல்லாமல், அல்லாஹ்வுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.  தொழுகை நேரத்துக்கு முன்னால் நாம் செய்து கொண்டிருந்ததை நிறுத்தி, நம் மனதைத் தெளிவாக்கி, உலகக்காரியங்களை விட தொழுகை மிக முக்கியமானது என்பதை உணர வேண்டும்.

விசுவாசிகளாகிய நம்முடைய கடமைகளை நாம் இப்போது அறிந்து கொண்டோம், புதுப்பித்துக் கொண்டோம், அதனால், நாம் பயிரிட்ட நன்மைகளிலிருந்து என்ன அறுவடை செய்வோம்? அல்லாஹ் (சுபஹ்) கொடையளிப்பவர்களில் மிகச் சிறந்தவன், மிக்க மன்னிப்பவன், அவனுக்காக நாம் ஒரு சிறு நற்செயல் இவ்வுலகில் செய்திருந்தாலும், அது மிகப்பெரிதாக இருந்தாலும், மிக அற்பமாக இருந்தாலும் அதற்கு வெகுமதி வழங்கத் தவற மாட்டான்.

இத்தகையோர் தான் (சொர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங்கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். [அல் குர்ஆன் 23:10-11]

யா அல்லாஹ், இவ்விலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கருணை காட்டி, எங்களை நேர்வழியில் – எங்கள் அருமை நபி (ஸல்) அவர்கள் வாழ்வு முழுதும் நடந்த வழியில்  - எங்களுக்கு அழகாகக் கற்றுத்தந்த வழியில் நடத்துவாயாக. ஆமீன்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online