Select a page

பட்டுத்துணியில் சுற்றப்பட்டு…

 

அல்லாஹ் நாடியிருந்தால், அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ, வணங்கியிருக்க மாட்டோம். இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்.’என முஷ்ரிக்குகள் கூறுகின்றனர்.  இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள். எனவே (நம்) தூதர்களுக்கு (தம் தூதுத்துவத்தை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).’ (16:35)

அல்லாஹ்வை குறை கூறுதல்

மக்காவிலிருந்த முஷ்ரிக்குகள் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கும், அவர்களுடைய முன்னோர்களுக்கும் வழிகாட்டியிருப்பான். அவர்களுடைய வழிகேட்டை, அல்லாஹ் அவர்களுக்கு வழிகாட்ட விரும்பவில்லை என்று அல்லாஹ்வின் மேல் பழி சுமத்துவது மூலம் நியாயப்படுத்தினார்கள்.

அல்லாஹ்வின் நாட்டம் என்பதற்கு உண்மையான பொருள்

அல்லாஹ்வின் நாட்டம் என்பதற்கு உண்மையான பொருள், அல்லாஹ், மனிதன் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறானோ – ந்ன்றியின் பாதை அல்லது நன்றிகெட்ட பாதை, வழிகாட்டுதல் அல்லது வழிகேடு, கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமை – அந்த வழியைத் திறந்து விடுகிறான்.  பிறகு, அல்லாஹ் மனிதன் என்ன செய்ய விரும்புகிறானோ, நன்மை அல்லது தீங்கு, அதைச் செய்ய விட்டு, அதன் முழுமைக்காக அவனுடைய விரிந்த பிரபஞ்சத்தின் திட்டத்திற்கேற்ப வழங்குவான்.   (The Meaning of the Quran, மௌதூதி).

அல்லாஹ்வுடைய புத்தகம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பதால், தங்கள் கீழ்ப்படியாமைக்கு இன்று கூட இதே சாக்கைச் சொல்லும் மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள், ‘தயவு செய்து எங்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என துவா செய்யுங்கள்.’என்பது போன்று பேசுவார்கள். ஆனால், சத்தியத் தேடலில் அவர்களாகவே எந்த முயற்சியையும்  எடுக்க விரும்ப மாட்டார்கள். ஒருவேளை அல்லாஹ் வானவர்களை அனுப்பி ஒரு மந்திரக் குச்சியால் அனைவரையும் விசுவாசிகளாக ஆக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இது அல்லாஹ்வின் வழி அல்ல. அவனுக்கு நம் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியும்,  நமக்கு உண்மையிலேயே நேர்வழியில் செல்ல விருப்பம் இருக்கிறதா, அதை அடைவதற்க்காக முனைய ஆவல் இருக்கிறதா என்பதை அவன் அறிவான்.

நம்முடைய சாக்குப் போக்குகளை ஆராய்வோம்

“அல்லாஹ்நாடியிருந்தால் நாங்கள் விசுவாசிகளாக இருந்திருப்போம்.”என்பதை அலசுவோம்.  இது தீன் தொடர்பான விஷயங்களில் வசதியாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இதையே உலக சம்பந்தமான விஷயங்களில் பின்பற்றுகிறோமா? வீட்டில் சும்மா இருந்து கொண்டு அல்லாஹ் நாடிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) கிடைக்கும் என காத்திருக்கிறோமா அல்லது உறக்கம் துறந்து மிகச் சிறந்த சம்பளத்துடன் கூடிய மிகச் சிறந்த வேலையை தேடிக்கொள்கிறோமா?

செயலோடு கூடிய நம்பிக்கையின் முக்கியத்துவம்

நம்மில் ஒருவர் நோயுற்றிருந்தால், படுக்கையில் படுத்துக் கொண்டு அல்லாஹ்(சுபஹ்) சுகமளிக்கட்டும் என காத்திருப்போமா அல்லது எவ்வளவு செலவானாலும், சிறந்த மருத்துவர்களையும், சிறந்த சிகிச்சையையும் தேடும் முயற்சியில் ஈடுபடுவோமா?

நம் குழந்தைகளின் கல்வி விஷயங்களில், நாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு மிகச் சிறந்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும் என நம்பியிருக்கிறோமா அல்லது விண்ணையும், மண்ணையும் நகர்த்தி, மணிக்கணக்கில் வரிசையில் நின்று, பெரும்புள்ளிகளை அணுகி, எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவழித்து சரியான பள்ளி அல்லது பல்கலைக்கழக்த்தில் சேர்ப்பதில்லையா?

ஒரு அழகான, தாராளமான கொடை, பொருள் மற்றும் உடல் சார்ந்தவை

நமக்கு வழிகாட்டுதல் இல்லையென்றால், நாம் அல்லாஹ்வை பழி சுமத்தக் கூடாது. அவன் எந்தக் குறையும் இல்லாத ஏற்பாடுகளை நம் உடல் ரீதியான தேவைகளுக்கு மட்டுமல்ல, நம் ஆன்மீகத் தேவைகளுக்கும் செய்திருக்கிறான்.

உடல்ரீதியான தேவைகளைப் பொருத்தவரை, அவன் உலகம் முழுவதையும் நமக்கு சேவை செய்யும்படி வைத்திருக்கிறான்; சூரியன் ஒளியைத்தருவதோடு, தாவரங்கள் வளர்வதற்கும் உதவுகிறது. நட்சத்திரங்கள் நாம் வழி தவறினால், வழி காட்டுகின்றன, கடல்கள் கப்பல்கள் மூலமாக வர்த்தகத்திற்கு உதவுகின்றன, மிருகங்கள் உணவும், உடையும் தருகின்றன, பாரம் சுமக்கவும் உதவுகின்றன, தாவரங்கள் உணவைக் கொடுக்கின்றன, மேகங்கள் மழையைத் தருகின்றன.. முடிவில்லாத பட்டியல்.

நம் ஆன்மீக தேவைகளுக்கு உள்ள ஏற்பாடுகளுக்கு குறைவே இல்லை. முதலாவதாக, அல்லாஹ் ‘ஃபித்ரா’வை எல்லா மனிதர்களுக்கும், மனசாட்சியாக -  சரி, தவறு எது என்று இயற்கையாகவே பிரித்தறிகிற தன்மையாக – கொடுத்திருக்கிறான்.  நாம் சிவப்பாக, வெளுப்பாக, கருப்பாக, பழுப்பாக, எப்படி இருந்தாலும், கிறிஸ்தவராக, யூதராக, ஹிந்துவாக, முஸ்லிமாக யாராக இருந்தாலும், ஆணாகவோ, பெண்ணாகவோ, குழந்தையாகவோ, பெரியவர்களாகவோ இருந்தாலும்   இந்த மனசாட்சி நம்முடையது. நன்னெறி என்பது நம்முள் இயற்கையாக அடங்கி உள்ளது.

இரண்டாவது, அல்லாஹ் நமக்கு ஒரு சிறப்பான பரிசைக் கொடுத்திருக்கிறான் –அது தேர்ந்தெடுக்கும் உரிமை. ஆதம் (அலை), அவர்களின் மனைவி இருவரின் கதையைப் பார்க்கும் போது, இந்த இரு பரிசுகளும் இடம்பெற்றுள்ளன. ஆதம் (அலை) அவர்கள் தடுக்கப்பட்ட மரத்தின் கனியைப்பற்றி எச்சரிக்கப்பட்டிருந்தாலும், அவர் தன் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்தி அப்பழத்தை உண்டார்.

உடனே, அவர்களுக்குள் அடங்கியுள்ள நன்னெறி வெளியானது, எப்படியென்றால், அவர்கள் உடனே தங்களை மரங்களில் உள்ள இலைகளைப் பறித்து மறைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

மூன்றாவதாக, அல்லாஹ்(சுபஹ்), அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவதா அல்லது வழிகெடுவதா என முடிவு செய்வதற்குநமக்கு அறிவாற்றலைக் கொடுத்திருக்கிறான். எப்படியிருந்தாலும், அவன் நம்மைப் படைத்தவன், அதனால் அவனுக்குத் தெரியும், சில சமயம் நம் அறிவாற்றல் தவறி, ஆதம் (அலை) அவர்களுக்கு ஆனது போல் நம்மைப் பேரழிவுக்கு இட்டுச்செல்லும்.

அவனுடைய கருணையினால், அவன் தன்னுடைய தூதர்களுடன் நமக்கு வழிகாட்டக்கூடிய வேதங்களை, அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெறுவது எப்படி என்ற விளக்கத்துடன் அனுப்பினான். அது, மக்களுடைய விருப்பத்திற்கும், ஆசைகளுக்கும் உட்படாத, ஒரு தெளிவான, நிரந்தரமான வரையறையின் மூலம் நாம் சரி எது தவறி எது என்று எந்த விஷயத்திலும் தீர்மானிக்க முடியும்.

வழிகாட்டுதலை ‘தேர்ந்தெடுத்தவர்களுக்கு’ வழி காட்டுதல்

அல்லாஹ் (சுபஹ்) நேர்வழியைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு வழிகாட்டுவதற்கு முழு ஏற்பாட்டையும் செய்திருக்கிறான்.  இவர்கள் தான், தங்கள் மனசாட்சியைக் கவனிக்கிறார்கள், அவர்களுக்கு எது சிறந்தது என்பதை தங்கள் அறிவாற்றலை பயன்படுத்தி, அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள வழிகாட்டுதலின்படியும், நபி (ஸல்) அவர்களின் போதனைகளின்படியும், முடிவு செய்கிறார்கள்.

அவர்கள் தங்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையை அல்லாஹ்வின் நாட்டத்திற்கு அடிபணிய முடிவெடுப்பதன் மூலம் அமல் படுத்துகிறார்கள். இம்மக்கள் தான் நேர்வழி பெற்று இறுதி இலக்கான சுவனத்தை அடைவார்கள். அல்லாஹ் (சுபஹ்), அவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்வழியைப் பின்பற்றுவதை அவர்களுக்கு எளிதாக்குவான். ஆனால், அருமையான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்ட பின்னும், யாராவது தவறான வழியைத் தேர்ந்தெடுத்தால், அல்லாஹ் (சுபஹ்) அவர்களுக்கு அழிவுப்பாதையில் சென்று நரகத்தை அடைவதை எளிதாக்குவான்.

வழிகாட்டி அலமாரியில் பட்டுத்துணியில் சுற்றப்பட்டுள்ளது

நம் அனைவர் வீட்டிலும் குர்ஆன் உள்ளது, இல்லையா? நம்முடைய வழிகாட்டி உயரமான அலமாரியில், பட்டுத்துணியில் சுற்றப்பட்டு உள்ளது.  ஆனால், நம்மில் எத்தனை பேர் அதைப் படிக்க நினைக்கிறோம்? எத்தனை பேர், முயற்சி செய்து, குர்ஆனைப் புரிந்து அதிலுள்ள போதனைகளின்படி நடப்பதைத்  தேர்வு செய்கிறோம்?

வழிகாட்டுதல் நம் விரல்நுனிகளில், நாம் அடையும் தூரத்தில் இருந்தாலும், நம்மில் பலர் அதைப் பயன்படுத்த நினைப்பதில்லை.  இப்படிப்பட்டவர்களுடைய – குர்ஆனைப் பெற்றும் அதன் போதனைகளின்படி நடக்க முயற்சிக்காதவர்கள்-இதயங்களைத்தான் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இது தான் அவர்களுக்கு தண்டனை.  நேர்வழி அவர்களுடைய இதயத்தை அடையாதவாறு அவர்களுடைய இதயங்கள் முத்திரையிடப்பட்டுள்ளன. என்ன ஒரு அதி பயங்கரமான தண்டனை?


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online