Select a page

பயங்கரவாதம் – குர்’ஆனின் பார்வையில்

NL0273.1

சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். முகாமை ரஷ்யா வெற்றிகரமாக தகர்த்திருப்பது நம்பிக்கையையும் அதே சமயம் கவலையையும் ஒரே சமயத்தில் உண்டாக்குகிறது.  தன்னை ‘இஸ்லாமிய அரசு’ என்று தைரியமாக அழைத்துக் கொள்ளும் இந்த பயங்கரவாத நிறுவனம் பல ஆண்டுகளாக, மிக மோசமான வன்முறையையும், தீங்கையும், அதைப் பற்றி ஒன்றும் அறியாத மார்க்கத்தின் பெயரில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு யாராவது தலையிட்டு, ‘போதும், நிறுத்துங்கள்’ என்று சொல்ல வேண்டியிருந்தது.  ரஷ்யாவின் தாக்குதலால் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.இன், எல்லா இலக்குகளும் கைபற்றப்பட்டன என்ற செய்தி வெளியான போது, உலகம் முழுதும் (நம் உம்மத் மாத்திரமல்ல), நிம்மதியான பெருமூச்சு விடுவது கேட்டது.

ஆனால், பலவீனமாக உள்ள பல ஆதாரமான பகுதிகளையும், வளங்களையும் கைபற்ற மற்ற குழுக்கள் விரைந்து வருவதைப் பார்க்கும்போது, சட்டவிரோதமான சக்திகள், வெறுமனே ஒரு கையிலிருந்து மற்ற கைகளுக்கு  மாறப்போகின்றனவோ என தோன்றுகிறது.  விரைவில், பழிவாங்கும் தாக்குதல்களுக்கும் வாய்ப்பு உண்டு.  மேலும், சமீப ஆண்டுகள், ஊடகங்களில் உள்ள செய்திகள் நம்பகமிக்கவையும், சரியானவையும் அல்ல என்பதை நமக்கு மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

அல்ஹம்துலில்லாஹ், நமக்கு முன்னால் உண்மை இருக்கிறது, நாம் அதைக் கையில் எடுத்து படித்து புரிந்து கொள்வதற்கு நேரம் ஒதுக்கினால் மட்டுமே அதைப் பெற முடியும்! எல்லா குழப்பங்களுக்கும் நடுவே, ரஷ்யத் தாக்குதலுக்கும் முன்னால், நம் அனைவரையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விவாதத்துக்கு திரும்புவது உதவிகரமாக இருக்கும்.  அவை:

பயங்கரவாதத்திற்கு குர்’ஆனில் இடம் இருக்கிறது?

ஆம்.

ஜிஹாத் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் பயங்கரவாதத்தை கடைபிடிக்கலாமா?

இந்த கேள்விக்கு ‘ஆம்’ என்று உரக்க சொல்பவர்கள் ஒன்று தீவிரவாதிகள் அல்லது முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பது முரண்பாடான விஷயம்.  அவர்களுடைய நம்பிக்கைக்கு மாறாக, குர்’ஆனை ஆய்வது நமக்கு ஒரு மிகத் தெளிவான ‘இல்லை’  என்ற பதிலைத் தரும். . .

இல்லை. பிரபஞ்சத்திலேயே ஒரே ஒருவருக்கு தான் பயங்கரவாதத்தை கடைபிடிக்கும் உரிமை உள்ளது.  வானவர்களுக்குக் கூட அந்த உரிமை இல்லை.  நீதியான பயங்கரவாதம் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வரும். 

(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்..” [அல் குர்’ஆன் 8:12]

இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்;... [அல் குர்’ஆன் 33:26]

உச்சகட்ட பயங்கரம் நியாயத் தீர்ப்பு நாளன்று தான் வரும்.

விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.. [அல் குர்’ஆன் 3:151]

மனிதகுலம் செவியேற்க வேண்டுமென்றால், உலகில் பயங்கரவாதத்தை உண்டுபண்ணுவது மிகவும் விரும்பத்தக்க அல்லது பயனுள்ள வழியல்ல.

. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது! [அல் குர்’ஆன் 17:60]

பயங்கரவாதத்தை உண்டு பண்ணுவது ஒரு முஸ்லிமுடைய வேலை அல்ல.

ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக. [அல் குர்’ஆன் 52:45]

இது உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம்.  எல்லாவிதமான இருளையும் போக்குவதற்கு மிகச் சிறந்த விளக்கு குர்’ஆனுடைய அறிவு தான் என்பதையும் இது காட்டுகிறது என நம்புகிறோம்.  அதனால், தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள், மனம் தளராதீர்கள்!  யாருக்குத் தெரியும்?  ஒரு வேளை, ஓராயிரம் ஏவுகணைகளை விட,  நாம் ஒன்றிணைந்து, குர்’ஆனைக் கற்பதும், அதிலுள்ள செய்தியைப் பரப்புவதும் மட்டுமே வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருக்கலாம். 

நீங்கள் பயன் பெற பிரார்த்திக்கிறோம்.

அண்டர்ஸ்டாண்ட் குர்’ஆன் தமிழ் குழுமம்


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online