Select a page

பயபக்தியுடையவர்களின் அமைதி

இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல்,  மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்.  அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிறான்.[அல் குர்ஆன் 2:224]

அச்சம் மற்றும் அமைதிக்குப் பொதுவாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  உங்கள் மனம் அமைதியாக இருக்கும்போது உங்களுக்கு எப்படி பயம் இருக்கும்? ஆனால் பக்தியின் மூலம், எல்லா சமயங்களிலும், போராட்டங்களிலும் அமைதியாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம்.  அல்லாஹ் (சுபஹ்) கொடையாளனும், வாழ்வாதாரம் அளிப்பவனும் ஆவான். நாம் கற்பனை கூட செய்து பார்த்திராத வழிகளிலெல்லாம் வாழ்வாதாரம் அளிக்கிறான்.  நம்மைச் சூழ்ந்துள்ள காற்றுக்காகவும், உயிரை உண்டாக்கும் நீருக்காகவும், அருள்களுக்காகவும், ஒவ்வொருவரும் பெற்றுள்ள தனித் திறமைகளுக்காகவும், நாம் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறோம். சுபஹானல்லாஹ்.

அச்சம், போராட்டம், துன்பம் இவற்றிற்காகவெல்லாம் எத்தனை முறை நாம் நன்றி அறிவித்திருக்கிறோம்?  மிகப் பயங்கரமான சூழ்நிலையில், நம் வாழ்வில் மிக மோசமான நாளில், நாம் இது வரை சந்தித்ததிலேயே மிகச் சிரமமான, மிகக் கடுமையான நேரத்தில் அல்லாஹ்வின் கருணையைப் பற்றி எண்ணிப்பார்க்கிறோமா? அந்நாளிலும், அதற்கு அடுத்து வரும் நாளிலும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல முடிகிறதா?

சுவாசம் மீண்டும் சீராகி, இருண்ட மேகங்கள் விலகி, ஆதவன் நீண்ட கதிர்களுடன் இதமான புன்னகை புரிய, இருகிய கோபம் அல்லது சோகம் இளகும்போது அல்ஹம்துலில்லாஹ் உங்கள் மனதில் தோன்றுகிறதா? உங்கள் உதடுகளிலிருந்து வெளிவருகிறதா? உங்கள் இதயத்தின் மிக ஆழத்திலிருந்து பாய்கிறதா?!

அல் முத்தகூன், பயபக்தியுடையவர்கள்

பயபக்தியைப்பற்றி படிக்கும் ஆர்வத்தில்,பக்தியின் மூலமும், அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்திலும் நாம் அமைதியைக் கண்டுபிடிக்கலாம்.  இன்ஷா அல்லாஹ், பயபக்தியுடன் இருப்பது நம்மை அல்லாஹ் வாக்களித்துள்ள வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட, விண்மீன்களுக்கு மேலுள்ள, என்றும் வெளியேறத் தேவையில்லாத மிக அமைதியான தங்குமிடமான அழகிய சுவனத்துக்கு அருகில் கொண்டு செல்லும்.  மாஷா அல்லாஹ்.

‘ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு.  அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர். (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்.  மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.’[அல் குர்ஆன் 3:198]

குர்ஆன் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களான, பக்தி, இறையச்சம், இவற்றைக் கற்றுத்தருகிறது. அதன் மூலம் நாம் நேர்வழி பெற்று, பாவமன்னிப்பு கோரி, அவனுடைய பாதுகாப்பைப்பெறலாம்.

அல் ஹாதி – வழிகாட்டுபவன்

(மனிதர்களே) இதுவும் வேதமாகும்.  இதனை நாமே இறக்கி வைத்தோம் – (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது.  ஆகவே இதனைப் பின்பற்றுங்கள். இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள்.  நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.[அல் குர்ஆன் 6:155]

இந்த குழப்பமான வாழ்வை நாமாகவே புரிந்து கொள்ளும்படி பார்வையற்றவர்களாக நம்மை விட்டு விடாததற்க்காக அல்லாஹ்விடம் நாம் எத்தனை நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், அல்ஹம்துலில்லாஹ்!  நாம் சிந்திப்பதற்க்காக, புரிந்து கொள்வதற்க்காக, அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதற்க்காக நமக்கு குர்ஆனை அருளியிருக்கிறான்.  நம் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், ஒரு நோக்கத்துடனும் நடத்துவதற்கும், தீயவைகளிலிருந்து விலகி, ஏமாற்றுபவர்களால் பாதிக்கப்படாமல், உறுதியாக இருப்பதற்க்கான மிகப் புனிதமான வழிகாட்டுதல்கள் அவை.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.  மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.[அல் குர்ஆன் 9:119]

அல் கஃபூர் - மிக்க மன்னிப்பவன்

(தான் தருமங்கள் செய்வதால்) வறுமை (உண்டாகிவிடும் என அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச்செயல்களைச் செய்யுமாறு உங்களை ஏவுகிறான்.  ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என) வாக்களிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடையவன்), யாவற்றையும் நன்கறிபவன்.[அல் குர்ஆன் 2:268]

ஆதமுடைய மகனுடைய பாவங்கள் வானளவு உயரமாக இருந்தாலும், அவன் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக, அல்லாஹ் (சுபஹ்) மிகவும் மன்னிப்பவன் என அல்லாஹ் கூறுகிறான். நாம் அவனுடைய தண்டனைக்கு அஞ்சி, அவனுடைய கருணைக்காக இறைஞ்சி, நல்லோர்களுடன் இருக்கும் பட்சத்தில், நம் கடந்த கால, நிகழ் கால, வருங்கால பாவங்களை மன்னித்து விடுவதாக அல்லாஹ் (சுபஹ்) இந்த வாக்கை நம் அனைவருக்கும் கொடுத்திருக்கிறான்.

எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் – அவர் அல்லாஹ்வே மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.[அல் குர்ஆன் 4:110]

அல் முஹைமின் – பாதுகாவலன்

அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரசூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்.  அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்த்லிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.[அல் குர்ஆன் 3:172]

அல்லாஹ் (சுபஹ்)வுடைய நாட்டமில்லாமல் பெரிதோ, சிறிதோ எந்தப் படையும் நம்மை வெல்ல முடியாது.  அதனால், அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்போது நாம் ஏன் எந்த மனிதன் அல்லது உலகில் எதையும் கண்டு அஞ்ச வேண்டும்? அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சுவது, நம்மை மனிதர்களின் மீதுள்ள பயம், செல்வத்தை இழப்பது பற்றிய பயம், அல்லது இவ்வுலகை இழப்பது பற்றிய பயம் போன்ற பாரங்களிலிருந்து காக்கிறது. அல்லாஹ் (சுபஹ்) நம்மை ஷைத்தானின் ரகசிய பேச்சுக்களிலிருந்தும், மனிதர்களின் ஊழல்களிலிருந்தும், நம்முள் உள்ள அறியாமையிலிருந்தும் காக்கிறான். அல்லாஹ்வை அஞ்சி, அமைதியை அடையுங்கள்!

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.[அல் குர்ஆன் 7:201]

தொழுகையின் மூலம் நாம் அல்லாஹ்வை நெருங்கி, அவனை நினைவு கூரலாம்.  மேலும், நாம் பாவம் செய்து விட்டு, அல்லது உறுதியில்லாமல் இருக்கும் போது, நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தொழுதால், அவன் நமக்கு, தாங்கிக்கொள்ளக்கூடிய பொறுமையையும், எதிர்க்கக் கூடிய சக்தியையும், அவனுடைய கருணையின் மேல் நம்பிக்கையையும் அளிப்பான், இன் ஷா அல்லாஹ்.

நம்முடைய எண்ணங்களைப் போன்ற மிகச் சிறியவற்றிலிருந்து, இப்பிரபஞ்சத்தின் கம்பீரம் மற்றும் பரம ரகசியங்கள் வரை அனைத்தினுடைய விவரங்களையும் அறிந்தவன், இச்செய்தியைக் கொண்டு நம்மை ஆசிர்வதித்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்!  அல்லாஹ் (சுபஹ்) நம் அனைவரின் உள்ளத்திலும் பக்தி என்ற விதையை அல்லாஹ் ஊன்றியிருக்கிறான்.  அது நற்குணமாக முளை விட்டு, தைரியமாகவும், பயபக்தியாகவும் வளர்ந்து, அமைதியாக மலர்கிறது.  இதைப்பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பார்த்து என்றென்றும் நன்றியோடிருப்போம்!

“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்.  வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்.  முஸ்லிமாக (உனக்கு முற்றிலும்  வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”[அல் குர்ஆன் 12:101]  ஆமீன்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online