Select a page

மரணித்துக் கொண்டிருக்கிறீர்களா? உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது!

going_dead

நாம் டிஜிடல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அதனுடன் நீண்ட ஒயர்களும், சார்ஜர்களும் நம் வீடுகளிலும், கார்களிலும், அலுவலகங்களிலும் எங்கே பார்த்தாலும் கிடக்கின்றன.  ஒரு பிளக்கில் கைபேசியையும், இன்னொன்றில் கணினியையும், இன்னும் என்னவெல்லாம் நம்முடைய ஆடம்பர ஆசைக்குத் தீனி போடுகின்றனவோ அவையெல்லாவற்றையும் மின்செருகியில் சொருகி வைக்கிறோம்!

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும், பாதி பேச்சில் இருக்கும்போது நம்முடைய செல்பேசி அணைந்து விட்டால், கடைசி வார்த்தை என்ன என்று தெரியாமல் போய்விடக்கூடும், அல்லது, நாம் ஒரு முக்கியமான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் சமயத்தில்  நம்முடைய கணினி உயிரிழந்து விட்டால், நாம் பரபரத்து, வேறு எவ்வித்த்திலாவது மின்சாரம் கிடைக்கிறதா என்று தேடுவோம்.

சாதன்ங்களை விடுங்கள், உங்கள் விஷயம் என்ன?  அடிக்கடி பாட்டரி இருக்கிறதா என்று பார்ப்பது, அவை சரியான விதத்தில் வேலை செய்வதற்காக சிரத்தை எடுத்துக் கொள்வது, உங்களுடைய பணி மற்றும் சந்தோஷத்திற்காக அவற்றை முற்றிலும் சார்ந்திருத்தல், என்று எந்நேரமும்  உங்களுடைய நவீன சாதனங்களுக்கு அடிமையாக உங்களைக் காண்கிறீர்களா?

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? [அல் குர்ஆன் 6:32]

நீங்கள் தொடர்புடன் இருக்கிறீர்களா?

இப்போது சற்று நிறுத்தி, சிந்தியுங்கள்.  நீங்கள் தொடர்புடன் இருக்கிறீர்களா? அதாவது, உங்களுடைய சக்திக்கு மூலாதாரமான, உங்களைப் படைத்தவனுடன் தொடர்போடு இருக்கிறீர்களா?  உங்களுடைய சாதனங்களில் மூழ்கி இருப்பதால், எத்தனை முறை உங்களுடைய தொழுகையை விட்டிருக்கிறீர்கள் அல்லது தாமதப்படுத்தியிருக்கிறீர்கள்?

சமூக ஊடகங்களில் இரவு நேரங்களில் அரட்டையடித்துக் கொண்டிருந்ததால், ஃபஜர் தொழுகையின் மகத்தான நன்மைகளை இழக்கிறோமா? அல்லது, நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான புத்தகம் (குர்’ஆன்), கவனிப்பாரின்றி அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, நாம் கையிலுள்ள மின்சாதனத்தை இரவில் உறங்குவதற்கு முன் புரட்டிக் கொண்டிருக்கிறோமா?

(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.[அல் குர்’ஆன் 9:65]

நமக்கு அளவின்றி அள்ளித் தரும் ஒருவனுக்கு செய்ய வேண்டிய நம்முடைய கடமைகளை, நேரத்தை வீணாக்குவதன் மூலமும், வழிபாடுகளில் கவனமின்றி இருப்பதன் மூலமும், வேண்டுமென்றே அலட்சியப் படுத்துகிறோம்.  அல்லாஹ் இல்லையென்றால் நாம் உயிரற்றவர்கள் அல்லவா?  இவ்வாழ்வில் நாம் செய்யக் கூடிய மிகச் சிறந்த செயல் அல்லாஹ்வை வணங்குவதும், அவனுடைய அருட்கொடைகளுக்கு உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு நன்றி செலுத்துதலும் ஆகும்.  அப்படியானால், நம்முடைய தீய பழக்கங்களிலிருந்து நம்முடைய தொடர்பை அறுத்துக் கொள்வது ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது?

தீமைகள்

தீமைகள் என்றால், ஒழுக்கமற்ற அல்லது கெட்ட நடத்தை.  அதனால், நம் சாதனங்களை ஒன்று நல்லவற்றுக்காக பயன்படுத்துவோம் அல்லது தீயவற்றிற்காக பயன்படுத்துவோம் என்பது தான் சாதாரணமாக நடக்கக் கூடியது. 24 மணி நேரம் உள்ள ஒரு நாளில் வெறும் ஒரு மணி நேரத்தை, சும்மா இருப்பது, சோம்பேறித் தனமாக இருப்பது அல்லது கவனமின்றி வீணடிப்பது, ஒரு தீய செயலாக மட்டுமல்ல, ஒரு பெரிய விஷயமாகக் கூட தோன்றுவதில்லை.  நபி (ஸல்) அவர்கள், இதைப் பற்றி மிகவும் வித்தியாசமாக நினைத்தார்கள்.  அவர்கள் கூறினார்கள், ‘மக்களில்  பலர் இரண்டு அருட்கொடைகளை இழந்து விடுகிறார்கள்; அவை, ஆரோக்கியம் மற்றும் நற்செயல்கள் செய்வதற்கு ஓய்வு நேரம்.’ [புகாரி]

நிமிடங்கள் மணிகளாகின்றன, மணிகள் நாட்களாகின்றன, நாம் உணர்வதற்குள், அர்த்தமற்ற,  சிந்தனையற்ற செயல்களிலும், அல்லது ஹராமான செயல்களிலும் வீணாக்கிய நேரம் வெட்கப்படக் கூடிய அளவு ஒரு பெருங்குவியலாக இருக்கும். நமக்கு இன்னும் எத்தனை நேரம் இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.  நாம் நேரத்தை வாங்கவோ, செலவழித்த நேரங்களைத் திரும்ப வாங்கவோ முடியாது!  அதனால், இனி வரும் நாட்களில் நம்முடைய நேரத்தை பயனுள்ள செயல்களைச் செய்வதன் மூலமும், அர்த்தமுள்ள முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும், இரு மடங்கு வேகத்துடன் உழைத்து, நாம் வீணாக்கிய நேரங்களுக்கு ஈடு செய்ய வேண்டும்.

உங்களுடைய தீனுக்குப் புத்துயிர் கொடுக்க 3 படிகள்

உங்களுடைய சாதனத்தை விட்டு ஒரு நாள் என்ன, ஒரு நிமிடம் கூடப் பிரிவது முடியாத காரியம் என நீங்கள் நினைக்கலாம்.   உங்களுடைய அலுவலகம் அல்லது கல்லூரியுடன், தினமும் தொடர்பில் இல்லாமல் எப்படி எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என  நினைக்கலாம்.  ஆனால், உங்களுடைய நேரத்தை எப்படி கவனமாக, அறிவுடன் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, உற்பத்தித் திறனையும், தீனையும் உயர்த்தலாம்.  இதை நடைமுறைப் படுத்துவதற்கு கீழே மூன்று வழிகள் உள்ளன:

படி 1

முதன் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான செயல், இது வரை வீணாக்கிய நேரங்களுக்காக வருந்தி மனதார அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பது, இனி வரும் நாட்களை இன்னும் சிறப்பாக செலவழிக்க அவனிடம் உதவி கேட்பது.  எந்நேரமும் நாம் அல்லாஹ்வை நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யும் அனைத்தும் அவனுடைய திருப்தியை நாடியே இருக்க வேண்டும்.

அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.. [அல் குர்’ஆன் 7:51]

தொழுகையை குறித்த நேரத்தில், பொறுமையுடனும், புரிதலுடனும், தூய நோக்கத்துடனும் தொழுங்கள்.  குர்’ஆனைப் படித்து, அதன் செய்தியை கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.  அல்லாஹ்வை அலட்சியப்படுத்தி, அதற்குப்பதிலாக, நியாயத் தீர்ப்பு நாளன்று அலட்சியப் படுத்தப்படுபவர்களில் நாம் இருக்கக் கூடாது.

படி 2

ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, உங்களுடைய சாதனங்களை நீங்கள் தான் கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதை உணருங்கள்! இதில் நீங்கள் எப்படி, எத்தனை நேரம் அந்த சாதனங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் அடங்கும்.

ஒரு நாளை எடுத்துக் கொண்டு, உங்களுடைய சாதனங்களை எப்போதும் போல் பயன்படுத்தும்போது, எத்தனை நேரம், என்னென்ன வேலைகளுக்காக அவற்றை பயன்படுத்தினீர்கள் என்பதை ஒரு புத்தகத்தில் பதிவு செய்யுங்கள்.  பிறகு, நீங்கள் வெறுமனே, எதுவும் உருப்படியாக செய்யாமல், இணையத்தில் உலாத்திக் கொண்டிருந்த, விளையாடிக் கொண்டிருந்த, சமூக வலைப்பக்கங்களில் வீண் அரட்டை அடித்துக் கொண்டிருந்த  நேரங்களை கணக்கெடுங்கள்.  இப்போது, நல்ல காரியங்கள், படிப்பது, கற்றுக் கொடுப்பது அல்லது வேலை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்ட நேரங்களைக் கணக்கிடுங்கள்.

பயனற்ற செயல்களில் வீணாக்கிய நேரத்தைக் கூட்டி, அதை ஏழால் பெருக்குங்கள்.  இப்போது நற்செயல்கள் செய்த நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், வீணான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதன் மூலம், அதிகப்படியாக உள்ள நேரத்தில் உங்களுடைய உலகக் கடமைகளை முடித்தபின் ஒரு நாள் முழுதுமோ அதற்கு அதிகமாகவோ கூட உங்களுடைய சாதனங்களிலிருந்து விலகி ஓய்வெடுக்க முடியும் !

படி 3

இப்போது உங்களுக்கு அதிக நேரம் இருக்கிறது, அதை நற்செயல்கள் புரிவதற்கு பயன்படுத்தலாம், இன் ஷா அல்லாஹ்.  உங்களுக்கு ஆர்வமுள்ள செயல்களையும், திறமைகளையும் பட்டியலிடுங்கள்.  அடுத்து, உங்களுடைய திறமைகளால் மற்றவர்கள் எப்படி பயனடைய முடியும் என்பதை அடையாளம் கண்டு, களத்தில் இறங்குங்கள்.

கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும், முன்னுரிமை தர வேண்டும்.  ஏனென்றால், அவை விசுவாசிகளாகிய நமக்கு கடமைகள்.  உங்களுடைய தீனையும், தொழுகையையும் கற்றுக் கொள்வதிலிருந்து தொடங்குங்கள்.  குர்’ஆனிய அரபி வகுப்பில் சேருவது உங்களுடைய புரிதலை செம்மைப்படுத்தி, அல்லாஹ்வை நெருங்க உதவும்.  உங்களுக்கு அல்லாஹ் அறிவை அருளியிருந்தால், கற்றுக் கொடுக்கத் தயங்காதீர்கள்!

வலைப்பதிவுகளை எழுதுங்கள்.  குழந்தைகளுக்கான, விளையாட்டாக, எளிதாகக் கற்றுக் கொடுக்கக் கூடிய வழிகளைக் கண்டுபிடியுங்கள், உடற்பயிற்சிக்காக நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் குழுவாக நடந்து தூய காற்றை சுவாசிப்பது, அல்லது நல்ல உணவைச் சமைத்து உங்களுக்குப் பிடித்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இங்கு கவனிக்க வேண்டியது, நீங்கள் எத்தனை காரியங்களைச் செய்கிறீர்கள் என்பதல்ல, தரமான செயல்களில், நல்ல நோக்கத்துடன் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பது தான்.

நல்ல முறையில் கழித்த நேரங்கள்

நம்முடைய சாதனங்களை நல்ல காரியங்களைச் செய்வதற்காக நாம் பயன்படுத்தும் வரை, இன் ஷா அல்லாஹ், நம்முடைய முயற்சிகள் வீணாகப்போவதில்லை.  நாம் அடிமையாகியுள்ள சாதனங்களைத் தாண்டி நற்செயல்கள் புரிவது நம்முடைய எல்லைக்குள் இல்லை.   அதனால், வெளி உலகத்திற்கு சென்று, அர்-ரஸாக், வாழ்வாதாரம் வழங்குபவனுடைய பல அருட்கொடைகளினால் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘யா அல்லாஹ், வாழ்வை நன்மையின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும் வழியாக ஆக்குவாயாக.’ என பிரார்த்தித்தார்கள்.

நீங்கள் பயன் பெற பிரார்த்திக்கிறேன்..


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online