Select a page

முஸ்லிம் பதின்பருவத்தினருக்கான 10 இலக்குகள்

1. நேர்மையாக இருங்கள்.

போட்டிகள்நிறைந்த இச்சமுதாயத்தில் நேர்மையாக இருப்பது பதின்பருவத்தில் உள்ள ஒருவருக்கு மிகவும் கடினமான ஒன்று. பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் மீது உள்ள பயத்தினால் நீங்கள் அடிக்கடி பொய் சொல்ல நினைக்கிறீர்கள்.  உதாரணமாக, நீங்கள் வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றால், அதற்க்கான தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு பொய்யை உருவாக்குகிறீர்கள். ஒரு தவறு செய்து விட்டால், அத்தவறைப் பெற்றோரிடமிருந்து மறைக்க முயலக் கூடும்.

ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் நேர்மையாக இருக்க முடிவு செய்தால், நீங்கள் பாவத்திலிருந்து விலகி இருப்பீர்கள்,பொய் சொல்வதைத் தவிர்ப்பதற்க்காக வீட்டுப்பாடத்தை ஒழுங்காக செய்து முடிப்பீர்கள். இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும், அசாதாரணமான வெற்றியை அடைவீர்கள்.  குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது,‘அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்.  கீழே சதா நீரருவிகள் ஒலித்தஒடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு.  அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக்கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.” [அல் குர்ஆன், 5:119]

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள், “நேர்மை நற்குணத்திற்க்கும், நற்குணம், சுவனத்திற்க்கும் இட்டுச்செல்லும், ஒரு மனிதன் தான் உண்மையாளராக ஆகும்வரை உண்மையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார். பொய்யானது, பாவச்செயல் அல்லது தீங்கிற்கும், பாவசெயல் நரக நெருப்புக்கும் இட்டுச்செல்லும். ஒரு மனிதன் அல்லாஹ் அவரைப் பொய்யர் என்று எழுதும்வரை தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருப்பார்.(புகாரி)

2. நம்பகமான நபராக இருங்கள்.

உங்கள் பெற்றோர் உங்களை நம்புகிறார்களா?  உங்கள் ஆசிரியர்கள்? உங்கள் நண்பர்கள்? அவர்களால் உங்களை நம்ப முடியாவிட்டால், நீங்கள் அவர்களோடு எப்படி ஒத்திருக்க முடியும்?

உங்கள் சமுதாயத்தில் ஒரு முக்கியமான இடத்தைப்பெற நீங்கள் ஒரு நம்பகமான மனிதராக இருக்க வேண்டும்.  இது உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற உதவும், மேலும், நீங்கள் என்றைக்கும் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.  நம்முடைய நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள்.  அவர் தன்னுடைய தோழர்கள், மனைவியர்கள், முஸ்லிமல்லாதவர்கள், அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராக இருந்தார். வர்த்தக பரிமாறல்களில் பலருடைய நம்பிக்கையையும் அவர் பெற்றிருந்தார்.

‘(இஸ்லாமிய) மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகி விட்டது.  ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கிறான்.[அல் குர்ஆன்2:256]

3. பெற்றோரிடம் நன்றியோடு இருங்கள்.

பதின்பருவத்தினர் பொதுவாக பெற்றோரைத் தவிர்க்கப்பார்ப்பார்கள். தங்கள் பெற்றோர் தங்கள் வாழ்வில் குறுக்கிடுவதை அவர்கள் விரும்புவதில்லை.  ஆனால், பெற்றோரின் வழிகாட்டுதலை விட சிறந்த வழிகாட்டுதல் இல்லை.  அவர்களுக்கும் உங்களைப்பற்றிய கனவுகள் இருக்கும், அவை நனவாக வேண்டும் ஆவல் அவர்களுக்கிருக்கும்.  நீங்கள் காணாத எத்தனையோ சிரமங்களை அவர்கள் மேற்கொண்டிருப்பார்கள். அதனால், உங்கள் பெற்றோரிடம் நன்றியோடிருந்து நீங்கள் செய்யும் அனைத்திலும் அவர்களுடைய அறிவுரையைக் கேளுங்கள்.

“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸியத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய (இறுதி) மீளுதல் இருக்கிறது.’[அல் குர்ஆன்31:14]

4. பொறுமையையும் தன்னடக்கத்தையும் கையாளுங்கள்.

நீங்கள் உங்கள் நண்பர்களோடு குடிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு அதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்பது தெரியும், அதனால் நீங்கள் அல்லாஹ்வுக்காக உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள்.

உங்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஒரு அழகிய பெண் அல்லது ஆணைப் பார்க்க நேர்ந்தால், உடனே, பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். உங்கள் மனம் இன்னொரு முறை பார்க்கச் சொல்கிறது, ஆனால் நீங்கள் அல்லாஹ்வுக்காக உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறீர்கள்.

உங்கள் நண்பன் உங்களைக் காரணமின்றி திட்டுகிறான், உங்கள் மனம் அவனைப் பதிலுக்குத் திட்டும்படி தூண்டுகிறது.  ஆனால், நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்தி பொறுமையோடிருக்கிறீர்கள்.

சவால்கள் நிறைந்த இவ்வுலகில் பதின்பருவத்தினர் சந்திக்கும் சில பொதுவான நிகழ்வுகள் இவை.  நீங்கள் கட்டுப்பாட்டோடும், பொறுமையோடும் இருந்தால், நீங்கள் என்றும் வருந்தத் தேவையில்லை, மேலும், உங்கள் வாழ்வில் உயரங்களை அடைவீர்கள்.  அல்லாஹ் (சுபஹ்) உங்களைப்பற்றி திருப்தி கொள்வான், நீங்கள் மறுமையில் மிக உயர்ந்த தரத்தை அடைவீர்கள்.

“பொறுமையாக இருந்தவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.[அல் குர்ஆன்41:35]

5. முழு கவனத்துடன் இருங்கள்.

வகுப்பில் இருக்கும்போது பகல் கனவு காண்பீர்களா? சிறிது நேரம் முன்பு என்ன படித்தீர்கள் என்பதன் சுருக்கத்தை உங்களால் தர முடியுமா? ஒரு வேலை செய்யும்போது உங்களால் முழு கவனம் செலுத்த முடியுமா?

இவை பதின்பருவத்தினர் சந்திக்கக்கூடிய சில கவனச்சிதறல்கள்.  இவற்றைத் தீர்ப்பதற்கு ஒரு எளிய வழி தொழுகை தான்.  தொழுகையில் முழு கவனத்தையும் செலுத்தினால், உங்களுடைய மற்ற செயல்பாடுகளிலும் அதே கவனத்தைச் செலுத்தக் கற்றுக்கொள்வீர்கள்.

‘மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தௌஸ் (எனும் சுவனபதியை) அனந்தரங்கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.’[அல் குர்ஆன்23:9-11]

6. தீர்மானத்தோடு இருங்கள்.

‘நீங்கள் ஏன் படிக்கிறீர்கள்?’என யாராவது கேட்டால் நீங்கள், ‘சும்மா எல்லோரும் படிக்கிறார்கள் என்பதால் படிக்கிறேன்.’என்று சொல்வீர்களா? இந்த பதில் உங்களுக்கு அறிவுடையதாக இருக்கிறதா? நீங்களே இது முட்டாள்தனமான பதில் என கூறுவீர்கள். அதனால், தீர்மானம் மிக அவசியம். உங்களுடைய நோக்கத்தில் நீங்கள் உறுதியாக இல்லாவிட்டால், உங்களுக்கே உங்கள் வாழ்வு என்ன, எதை நோக்கிப் போகிறீர்கள் என்று புரியாது.  உங்கள் எல்லா செயல்களும், பள்ளிக்கூட வேலைகளிலிருந்து தொழுகை வரை, எல்லாமே வீண் தான்.  வெற்றி பெற மிக முக்கியமாகத்  தேவையானது தீர்மானம் தான்.

‘என் அருமை மகனே, நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக. நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக.  உனக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.”[அல் குர்ஆன்31:17]

7. வீண் பேச்சுக்களைத் தவிருங்கள்.

பதின்பருவத்தினருக்கு வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது பழக்கமாக உள்ளது. பெரும்பாலும், அவர்களுக்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாது.  வீணாக சினிமா, பாட்டு போன்ற பேச்சுக்களில் ஈடுபடுவார்கள். இது உங்களை நேரான பாதையிலிருந்து விலக்கி விடும்.  நீங்கள் படிப்பதின் நோக்கமே கேள்விக்குரியதாகிவிடும். படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உங்கள் நல்ல நோக்கங்கள் எல்லாம் நசுங்கி விடும்.  இவ்வுலகில் மாத்திரம் அல்ல, மறுமையிலும் நீங்கள் சிரமப்படுவீர்கள்.  அதனால், வீண் பேச்சுக்களில் ஈடுபடாதீர்கள்.  வீண் பேச்சுக்களைக் கேட்பவர்களாகவும் இருக்காதீர்கள்.  பேசுபவரை விட கேட்பவர் அதிக ஆபத்தானவர். கேட்பது உங்களை பேசத்தூண்டும், பேசுவது உங்களைச் செயல்படத்தூண்டும்.  அதனால், வீண் பேச்சுக்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், குறிப்பாக பதின்பருவத்தினர்கள் அவர்கள் மீது அது ஏற்படுத்தக் கூடிய எதிர் விளைவை அறிவதில்லை.

‘(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லஹ்வின் பாதியிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்). இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.’[அல் குர்ஆன்31:6]

உங்கள் பார்வையில் அது தவறாகத் தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அதை மிகச் சிறிய தவறாக நினைப்பீர்கள், ஆனால், அல்லாஹ் (சுபஹ்) அதை நியாயத்தீர்ப்பு நாளன்று கொண்டு வருவான்.

[லுக்மான் தம் புதல்வரிடம் கூறினார்], “என் அருமை மகனே, (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் சித்து அளவே எடையுள்ளது ஆயினும், அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள் இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொன்று வருவான். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன். (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.’[அல் குர்ஆன்31:16]

8. உலக விஷயங்களால் கவரப்படாதீர்கள்.

பதின்பருவத்தினர் மறுமை வாழ்வைப்பற்றி அறியாதவர்களாக் இருக்கிறார்கள். அவர்கள் இம்மை வாழ்வு தான் நிரந்தரமானது என எண்ணி முடிந்தவரை எல்லாவற்றையும் அனுபவிக்க முயல்கிறார்கள்.  அவர்களுக்கு அல்லாஹ் (சுபஹ்) கண்காணித்துக் கொண்டிருக்கிறான் அவர்கள் செய்பவற்றிற்கெல்லாம் கூலி கொடுப்பான் என்பது தெரியவில்லை.

‘மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள். இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்.  (அந்நாளில்) தந்தை தன் மகனுக்குப் பலனளிக்க மாட்டார். (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறேவேற்றி வைக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்.  ஆகவே இவ்வுலக வாழ்வு உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்.  மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.’[அல் குர்ஆன்31:33]

நீங்கள் அல்லாஹ் சொல்லியபடி, அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, உங்களை இளவயது சபலங்களை/விருப்பங்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால், நீங்கள் இவ்வுலகில் மட்டுமல்லாமல், மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள்.

‘அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு நிழலில்லாத அந்நாளில், ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலிலிருந்து நிழல் தருவான். அவர்கள், நீதி மிக்க அரசன், அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த ஒரு இளைஞன்….‘[புகாரி]

9. உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் வீணாக்காதீர்கள்.

தேவையில்லாத பொருட்களில் வீணாக செலவு செய்வது, டி.வி. பார்ப்பது, பாட்டு கேட்பது, போன்ற பயனற்ற விஷயங்களில் நேரத்தை செலவழிப்பது, எல்லாம் ‘வீண்’ என்ற வகையில் அடங்கும். இதில் குறிப்பாக பதின்பருவத்தினரின் பங்கு 70%க்கு மேல் இருக்கும். அதனால், வீணாக்குவதை, உண்ணுவது, பருகுவதில் கூட தவிருங்கள்.

. . . ஆதமுடைய மக்களே…….உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.[அல் குர்ஆன்7:31]

10. பயபக்தியோடு இருங்கள்.

நீங்கள் ஒரு பக்தியுள்ள விசுவாசியாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள தன்மைகளில் பெரும்பாலனவற்றை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.  அல்லாஹ் எந்நேரமும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அஞ்சினால், நீங்கள் உங்கள் பெற்றோரிடம் நன்றியோடிருப்பீர்கள், நேர்மையாகவும், நம்பகமானவராகவும் இருப்பீர்கள், வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பீர்கள்.  அதனால், பயபக்தியுடன் இருக்க முயலுங்கள்.  மேலேயுள்ள தன்மைகள் எப்படி தானே உங்களுக்குள் வரும் என்பதை உணர்வீர்கள்.

‘ஆதமுடைய மக்களே, மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம்.  ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது.  இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக்கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.’[அல் குர்ஆன்7:26]


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online