Select a page

முஹம்மது எனக்கு நடுநிலையானவர்

அனைத்துப் புகழும், நன்றியும், மரியாதையும், மகத்துவமும், ஒருவனும், ஒருவன் மட்டுமேயான அல்லாஹ்வுக்கே. காரணம் அல்லாஹ்வே கூறுகிறான், ‘நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே’ என்று.  மேலும், அனைத்து சலவாத்தும், சலாமும் அல்லாஹ்வினால், ‘மிகச்சிறந்தகுணமுடையவர்’ (குலுகுன்அசீம்) என்றும்,  முழு பிரபஞ்சத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரி’ (உஸ்வதுன் ஹஸனா) என்று புகழப்பட்டவருமான,  நம்முடைய நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கே.

பின்பற்ற வேண்டிய உள்ளுணர்வு

பிறந்த குழந்தைக்கு தாயிடமிருந்து அன்பும், அரவணைப்பும், பாசமும் அதிகம் கிடைக்கிறது.  இக்குழந்தை தாயின் கைகளில், மிகச் சுகமாகவும்,  முற்றிலும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் உணருகிறது; இது தான் எல்லா இனத்திற்கும் பொதுவாக ஏற்படக்கூடிய மிக இயற்கையான உள்ளுணர்வு.

படிப்படியாக, அவனோ, அவளோ வளர்கையில், சுற்றுப்புறத்திலிருந்து கற்றுக்கொள்ள  முயலும்போதும், அறிவை தாராளமாக வழங்கும் தன் ஆசிரியர்களால் தூண்டப்படுகிறார்கள். குழந்தை ஆசிரியரை தழுவி, அவருடைய வழிகாட்டுதலை பின்பற்றுகிறது.  இதுவும் ஒரு இயற்கையான நிகழ்வு தான் – தன் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அல்லது தன் சுற்றுப்புறத்தில் உள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு அவரைப்பின்பற்றுவது ஒரு ஆரோக்கியமான சமூக  உள்ளுணர்வாகத் தான் கருதப்படுகிறது.

ஒவ்வொரு குலத்தினருக்கும் ஒரு தூதர்

தூயோனான அல்லாஹ் வெறுமனே மனிதர்களைப் படைத்து அவர்களை வாழ்வின் சத்தியப்பாதையை தானாகவே கண்டுபிடிக்கும்படி உலகில் விட்டுவிடவில்லை; அவ்வப்போது தன் வேத வெளிப்பாடுகளை அனுப்பிக்கொண்டிருந்தான். அவற்றை விளக்குவதற்கும், நமக்கு நேரான சத்தியப்பாதையை காட்டுவதற்கும் நபிமார்களை அனுப்பினான்.

அதனால், அல்லாஹ்வே,தான் ஒரு வழிகாட்டியை ஒரு உண்மையான தூதரின் வடிவில் உலகில் வாழ்ந்த ஒவ்வொரு குலத்தினருக்கும் அனுப்பியதாக குர்ஆனில் கூறுகிறான் (லி குல்லி கௌமின் ஹத் – ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒரு வழிகாட்டி’).

ஒவ்வொரு குலத்தினரின் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்களுடைய குறைவான அறிவு, அவர்களுடைய கற்கும் திறன் இவைகளுக்கு பொருந்துமாறு அல்லாஹ் உண்மையான நபியை அனுப்பினான். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் உலகிற்கு 1,24,000 நபிமார்களை அனுப்பியதாக கூறினார்கள்.  இருப்பினும் அல் குர்ஆனில் அல்லாஹ் 25 நபிமார்கள் மற்றும் ரசூல்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறான்.

மனித சமுதாயத்திற்கு ஒரு ரசூல்

பல நபிமார்கள் வந்து தங்கள் குலத்தினருக்கும், குழுவினருக்கும் வழி காட்டிய பின், மக்கள் சொற்ப அறிவையே பெற்றார்கள்.  இறுதியாக, முழு மனித சமுதாத்திற்கும் ஒரு ஒரு நபியின் வருகை தேவைப்பட்ட்து.  இறுதி நபி, கல்வியறிவற்ற,  பழங்குடியரான அரபிகள் வாழ்ந்த அரேபிய தீபகற்பத்திற்கு அனுப்பப்பட்டார்.

அப்போது அரபிகள் அவர்களுக்கு முன்னால் இருந்த ஒவ்வொரு சக்தி வாய்ந்த பொருளையும் வழிபட்டார்கள்.  அவர்கள் எந்த அளவிற்கு மிருகத்தனமாகவும், கொடூரமாகவும் இருந்தார்கள் என்றால், அவர்களுடைய பெண் குழந்தைகளை கொலை செய்வதோடு, பிறந்தவுடன்  உயிரோடும் புதைத்தார்கள். இப்படிப்பட்ட நீதியற்ற சமூகத்திற்கு, அல்லாஹ் ‘இறுதி முத்திரை’ (காத்தமுன் நபி) என்று குறிப்பிட்டுள்ள தன் இறுதி ரசூல் நபி முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பினான்.

அல்லாஹ் (சுபஹானஹுத்தாலா) அத்தனை சிறந்த குணங்களையும் நம்முடைய நபி முஹம்மது  (ஸல்) அவர்கள் மீது அருளியுள்ளான். அவர் ‘காமில்’(முழுமையானவர்) மட்டுமல்ல, ‘அக்மல்’(எல்லா வகையிலும் பூரணமானவர்) மற்றும் ‘மிக, மிக நிறைவு பெற்றவர்’, ‘கமால்’. பூமியில் வேறு எந்த மனிதனும் இப்படிப்பட்ட உயர் குணங்களோடு பிறக்கவில்லை.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதுவரை அகிலம் கண்டிராத வெகு அழகான ‘உஸ்வதுன் ஹஸனா’(மிகச் சிறந்த முன்மாதிரியாக) இருந்தார்.

அல்லாஹ் யாரை இப்பிரபஞ்சத்திற்கு தன் இறுதி நபியாக அனுப்பினானோ,  அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்துகளாக இருப்பதற்கு, முஸ்லிம்களாகிய நாம், மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும், கொடுத்து வைத்தவர்களாகவும் இருக்கிறோம். நபி முஹம்மது (ஸல்) அவர்கள், சத்திய வழிகாட்டலும் முழுமையான ‘வாழும் கலை’யுமான தீனுல் இஸ்லாமை போதித்தார்கள்.  தூயோனான அல்லாஹ்வே தன் குர்ஆனில் இஸ்லாமை ‘ஒரே வாழும் வழி’என்று குறிப்பிட்டுள்ளான்.

ஒரு விரிவான வேதம்

மக்கள் தங்கள் வாழ்வை தொட்டிலிலிருந்து மண்ணறை வரை நடத்த தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் குர்ஆன் தாங்கியுள்ளது. அல்லாஹ் மனிதன் இப்புவியில் வாழும் வரை தேவையான வாழ்வு, நடத்தை, கற்றல், சம்பாத்தியம், சேமிப்பு, செலவழிப்பு போன்ற  எல்லா விஷயங்களையும் விவரித்திருக்கிறான். அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகச்சிறந்த ஞானத்தையும், கற்றலையும், பயிற்சியையும், ஒரு மனித முன்மாதிரியாக இருப்பவருக்கு  இருக்க வேண்டிய அனைத்து சிறந்த குணங்களையும் அருளியிருந்தான். முஹம்மது நபி (ஸல்) முழு மனிதகுலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய லட்சிய முன்மாதிரி.

ஒரு முறை நபித்தோழர்கள் ஒரு குழுவாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களுடைய உயர் குணங்களைப் பற்றி தங்களுக்கு கூறும்படி கேட்டார்கள்.  அவர்கள் மக்களைப்பார்த்து கேட்டார்கள், ‘நீங்கள் புனித குர்ஆனைப் படித்ததில்லையா?  ‘அவர்கள் குர்ஆனாகவே வாழ்ந்தார்கள்’என கூறினார்கள்.

கீழ்ப்படிபவர்களின் பலமும், கீழ்ப்படியாதவர்களின் பலவீனமும்

அரபுலக மக்கள் இஸ்லாமைத் தழுவி, முஹம்மது நபி (ஸல்) திருவேதத்தின் அறிவைப் போதித்த சிராஜம்முனீரா (மற்ற விளக்குகளுக்கு ஒளியேற்றக்கூடிய விளக்கு) அவர்களை பின்பற்றிய போது, அவர்களும் அறிவுபெற்றார்கள். நபி (ஸல்) அவர்களுடைய தோழமையில், அவர்களுடைய வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு அவர்கள் உலகின் பெரும்பகுதியை ஆளத்துவங்கினார்கள்.

அவர்கள் குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றியவரை அவர்கள் ஒளியில் இருந்தார்கள். அவர்கள் அதிலிருந்து விலகியபோது, அல்லாஹ் அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பிடுங்கி விட்டான்; அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து ஒழுங்கான தலைமை இல்லாமல், உலகம் முழுதும் சிதறி விட்டார்கள்.

“நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தேனா இல்லையா?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது, அவர்களுடன் இருந்த மக்கள் அனைவரிடமும், இஸ்லாமியக் கல்வியை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்களா இல்லையா என கேட்டார்கள். அவர்கள் அனைவரும், அவர்கள் தங்களுக்கு சரியாக இஸ்லாமைப் போதித்தார்கள் என்று சொன்ன போது, தன் ஆள்காட்டி விரலை அவர்களை நோக்கி காண்பித்து, ‘இதற்கு நீங்களே எனக்கு சாட்சி’என்று கூறினார்கள். பிறகு, தன் ஆள்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, ‘அல்லாஹும்ம அஷுஹுத்’ (யா அல்லாஹ், நீயே எனக்கு இவ்விஷயத்தில் சாட்சியாக இரு’என கூறினார்கள்.  பிறகு, மக்களிடம், ‘நான் இரு விஷயங்களை உங்களிடம் விட்டுச் செல்கிறேன், ஒன்று, குர்ஆன், இரண்டாவது, என்னுடைய சுன்னா. நீங்கள் இவை இரண்டையும் பின்பற்றும் வரை, வெற்றி பெறுவீர்கள்.’ என்று கூறினார்கள்.

அங்கிருந்த மக்களிடம், அவர்களுடைய போதனைகளை அங்கில்லாத மக்களுக்கும் போதிக்கும்படி பணித்தார்கள். ‘பல்லிகு அன்னி வலவ் அல்ஆயா – என்னிடமிருந்து பெற்ற அறிவை, ஒரு சிறு வாக்கியமாக இருந்தாலும், பரப்புங்கள்.’ என கூறினார்கள்.

அளவற்ற அருளாளனான அல்லாஹ் (சுபஹ்) நமக்கு ஹிதாயா(நேர்வழி)வை அருளி, குர்ஆனையும், சுன்னாவையும் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றுபவர்களாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை நம்முடைய லட்சிய முன்மாதிரியாகவும் ஆக்குவானாக. ஆமீன்.  இது தான் மனிதகுலம் முழுதிற்க்கும் பொருந்தக்கூடிய ஒரே அமைதியான தீர்வு.

ஆமீன் வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online