Select a page

ரமதான் நெருங்கி விட்டது – தயார் செய்து கொள்ள வேண்டிய நேரம் இது

say_salam1

எண்ணற்ற நற்பாக்கியங்களை நம்மீது பொழிய வரும் அருள் மிக்க ரமதான் மாதம் மீண்டும் வருகிறது. இரண்டு மாதங்கள் என்பது மிக நீண்ட காலம் போல தோன்றினாலும், இப்போதிலிருந்தே நாம் தயார் செய்யத் தொடங்கினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு திருமணத்திற்காக எத்தனை மாதங்களுக்கு முன்னால் தயார் செய்ய ஆரம்பிக்கிறோம்? ஒரு திருமணத்தை விட பன்மடங்கு உயர்ந்த நாட்களைக் கொண்டுள்ள ஒரு மாதம் அருமையானதல்லவா? அம்மாதத்தின் ஒவ்வொரு நொடியிலிருந்தும் உயர்ந்த பயனை அடைய விரும்புவதால், நாம் குறைகளற்றதாக, ஆக்கபூர்வமாக, இருக்க வேண்டும் என எண்ணுகிறோம்.
நிச்சயமாக நாம் உடல் ரீதியாக எந்த செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்னும் ஒரு நல்ல மனநிலையை தயார் செய்து கொள்ள வேண்டும்.

1. மனதளவில் ரமதானை வரவேற்க நம்மை இப்போதிலிருந்தே நாம் தயார் செய்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

ரமதானை சந்திக்கும் கௌரவத்தை உங்களுக்கு அளிக்கும்படி அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
ம’ஆலிபின்ஃபுதைல் அவர்கள்

“ஸஹாபாக்கள் ரமதானுக்கு ஆறு மாதங்கள் முன்னாலிலிருந்தே ரமதானை அடைவதற்கு தங்களுக்கு நீண்ட ஆயுளைத்தரும் படியும், ரமதான் முடிந்து ஆறு மாதங்கள் வரை தங்கள் நோன்பை ஏற்றுக்கொள்ளும் படியும் அல்லாஹ்விடம் துவா செய்வார்கள்.’*

2. ரமதானில் பொருட்கள் வாங்குவதற்கான செலவுத் திட்டத்தை தயார் செய்யுங்கள்.
ரமதானில் நீங்கள் பல பொருட்களை வாங்க நினைத்திருப்பீர்கள், அவற்றை முடிவு செய்து, என்னவாங்க வேண்டும், எத்தனை செலவாகும் என்று ஒரு திட்டம் தயாரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

• குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசுகள் வாங்குவது. நபி கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுப்பது உங்களுக்கிடையேஅன்பைவளர்க்கும். [அல்அதப்அல்முஃப்ரத்]

ரமதான் இருக்கும் உறவுகளை பலப்படுத்தவும், அறுந்து போன உறவுகளை மீண்டும் சேர்க்கவும் சிறந்த நேரம். அதற்கு பரிசுகளை விட வேறு என்ன பயனுள்ளதாக இருக்க முடியும்? உங்களுக்கு மிக நெருங்கியவர்களிலிருந்து தொடங்குங்கள், ஏனென்றால், எப்போதும் நம் அருகில் இருப்பவர்களை பெரும்பாலும் அலட்சியப்படுத்தி விட நேரலாம்.

• ஒரு குறிப்பிட்ட ஸதகா (விருப்ப தர்மம்)விற்காக பணத்தை சேமியுங்கள். உதாரணமாக, இந்த ரமதானில் ஒரு ஏழை சகோதரி சொந்த தொழில் தொடங்குவதற்கு ஒரு தையல் மிஷின் வாங்கிக்கொடுக்க நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் முன்னாலேயே திட்டமிட்டு, சேமிக்க வேண்டும்.

• ரமதானில் தேவையான உணவுப் பொருட்கள். அம்மாதத்தில் கடைகளுக்குச் சென்று நம் நேரத்தை வீணாக்ககூடாது. மேலும், ரமதானில் சில இடங்களில் உணவுப்பொருட்களின் விலை கூடி விடக்கூடும். அதனால், முதலிலேயே, அவற்றை வாங்கி சேமித்து வைப்பது நலம்.

3. உங்களுடைய தினசரி, வாராந்திர, மாதம் முழுதுக்குமான வணக்கவழிபாடுகளை வரையறை செய்து கொள்ளுங்கள். ரமதானுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் இருக்கும் போது வரை இதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம். உண்மையில் நீங்கள் முன்னாலேயே திட்டமிட ஆரம்பித்தால், அதை சரிசெய்து, முழுமையாக ஆக்க உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் செய்யவிருக்கும் சிலவற்றை முயன்றுபார்க்கலாம்.

ரமதான் குர்’ஆன் இறங்கிய மாதம், அதனால், உங்களுடைய நேரத்தை மிக சிறந்த முறையில் முதலீடு செய்வதற்கு, குர்’ஆனுடன் உங்களை இணைத்துக்கொள்வது தான். உங்களுடைய திட்டத்தில் சேர்க்க வேண்டியவைகள் சில:

• குர்’ஆன் ஓதுவது. ஓதத் தெரியாவிட்டால், அல்லது நீங்கள் தடுமாறுகிறீர்கள் என்றால், ஒரு குர்’ஆன் வகுப்பில் இப்போதே இணைவது மிகச்சிறந்த செயல். ‘18 மணி நேரத்தில் குர்’ஆன் ஓதக்கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற வகுப்பில் இப்போது இணைந்தால், இன்ஷாஅல்லாஹ், மிக எளிதாக ரமதானுக்கு முன்னால் உங்களால் முடிக்க முடியும், உங்களால் ஏற்கனவே நன்றாக ஓத முடியும் என்றால், உங்களுடைய ஓதும் வேகத்தை அதிகரிக்க பயிற்சி செய்யும் நேரம் இது. உங்களுடைய சக்திக்கு சிறிது சவால் விடுவது போல, தினமும் ஒன்று அல்லது இரண்டு ஜுஸ்வுகளை ஓதுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நினைவிருக்கட்டும், உங்களுடைய முயற்சிகளின் தரம் தான் முக்கியம். நீங்கள் சாதித்தவற்றின் எண்ணிக்கை அல்ல.

• குர்’ஆன் மனப்பாடம் செய்தல். ரமதானில் குர்’ஆனில் ஒரு பகுதியை மனப்பாடம் செய்ய விரும்பினால், இப்போதே அதைப்பழக ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், மனப்பாடம் செய்வதற்கு பாடமும், பயிற்சியும் தேவை. அதற்கு படிப்படியான பயிற்சி தேவை. அதனால், ரமதானில் தினமும் 5 வசனங்கள் மனப்பாடம் செய்ய நீங்கள் விரும்பினால், இப்போதி லிருந்து ஒரு நாளைக்கு ஒரு வசனம் என்று ஆரம்பித்து படிப்படியாக உயர்த்தி, ரமதான் வரும் போது ஒரு நாளைக்கு 5 வசனம் என்ற நிலையை அடைந்து விடுவீர்கள். மனப்பாடம் செய்யும் போதே வார்த்தைகளின் பொருளையும் மனப்பாடம் செய்து விட்டால் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online