Select a page

வெள்ளிக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்காக துவா செய்யுங்கள்!

say_salam1

வெள்ளிக் கிழமை சூரா கஹஃப் ஓதுவது நாம் நன்றாக அறிந்த சுன்னத். நம்மில் பலர் அதை வெள்ளியன்று எப்படியாவது ஓதிவிட கடுமையாக முயல்கிறோம். ஆனால், வெள்ளிக்கிழமைகளில் பின்பற்ற வேண்டிய, ஏராளமான நன்மைகளைத் தாங்கியுள்ள ஒரு எளிய சுன்னத் என்ன என்று தெரியுமா? நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது தான் அது.!

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதால் கிடைக்கும் பலன்கள்.

• நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறீர்கள். “இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.” [அல் குர்’ஆன், 33:56] • உங்களுடைய படித்தரத்தை பத்து நிலைக்கு உயர்த்துகிறான்.
• அது உங்களுடைய பத்து பாவங்களை அழிக்கிறது, பத்து நன்மைகளை சேர்க்கிறது.
• நியாயத்தீர்ப்பு நாளன்று நபி (ஸல்) அவர்களை நீங்கள் நெருங்குவதற்கு அது ஒரு காரணமாக இருக்கும்.
• ஸலவாத் சொல்வது வானவர்களுடைய செயல்.
• அது நபி (ஸல்) அவர்கள் அதே முகமனை உங்களுக்கு திரும்பச்சொல்ல காரணமாக இருக்கிறது.
• அல்லாஹ்வுடைய கருணையைப் பெறுவதற்கு ஒரு வழி இது.
• நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதில் நீங்கள் கருமித்தனமாக இருப்பதிலிருந்து உங்களைக் காக்கிறது.
[இப்னு அல் கைய்யிம் அல் ஜௌசீயா (ரஹ்) அவர்களின் ‘ஜலா உல் அஃப்ஹம் ஃபீ ஃபத்லீஸ்ஸலாத் வ ஸலாம் அலா கஹைரீ அன்’ஆம்’ என்ற புத்தக்கத்திலிருந்து”] அல் மனாவீ (ரஹ்) கூறியுள்ளார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதற்கு பல சொற்களும், சொற்றொடர்களும் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானதும், சிறந்ததும், “அல்லாஹும்ம, ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம” [ஃபைதுல் கதீர் #1403] • வரும் வெள்ளிக்கிழமை நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள்
• வெள்ளிக்கிழமைகளில் அலாரம் வைத்து உங்களுக்கு நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
• இன் ஷா அல்லாஹ், மற்றவர்களுக்கும் அறிவித்து, கற்றுக் கொடுங்கள்!
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக்கள் தனிப்பட்ட முறையில் சொல்லப்பட வேண்டும், குழுவாக அல்ல.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online